நடிகை தீபிகா படுகோனேவின் மேலாளர் வீட்டில் போதை பொருள் பதுக்கியது அம்பலம்

Karishma Prakash had been questioned last month by the anti-drugs agency, which has been investigating the sale and use of banned substances in Bollywood.

0
127

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவின் மேலாளர் கரிஷ்மா பிரகாஷ் வீட்டில் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் மரணத்தையடுத்து அவரது மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு, சுஷாந்த் சிங் காதலி ரியா சக்ரபோர்த்தி மற்றும் அவரது சகோதரர் ஷோவிக் சக்ரபோர்த்தி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.


இந்த நிலையில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனுக்கு போதைப்பொருள் தடுப்புப்பிரிவு முகமை சம்மன் அனுப்பியுள்ளது. மேலும் நடிகைகள் ரகுல் பிரீத் சிங், சாரா அலிகான்,  ஷ்ரத்தா கபூர் ஆகியோருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

போதைப்பொருள் தொடர்பாக நடிகைகங்கனா ரணாவத், தீபிகாபடுகோனே மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து, தற்போது நடிகை தீபிகா படுகோனேவின் மேலாளர் கரிஷ்மா பிரகாஷ் வீட்டில் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், மும்பையில் உள்ள கரிஷ்மா பிரகாஷின் வீட்டில் என்.சி.பி. அதிகாரிகளின் சோதனையில் போதை பொருள் பதுக்கியது அம்பலமாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here