தூத்துக்குடியில் மே 22 ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தார்கள். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை பல அரசியல் கட்சித் தலைவரகளும், நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஏற்கனவே சந்தித்து ஆறுதல் தெரிவித்திருந்தனர்.

De-KCDUUYAA_lLQ

De-KuzOVQAABHvh

இன் நிலையில் நடிகர் விஜய் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் வீடுகளுக்கு நள்ளிரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். தூத்துக்குடியில் ஸ்லோனின், ஜான்சி உள்ளிட்ட உயிரிழந்தவர்களின் வீட்டிற்கு நேரில் சென்ற விஜய் ஆறுதல் தெரிவித்து தலா ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவியும் வழங்கினார்.

இதனிடையே துப்பக்கிச்சூட்டில்காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை இன்று சந்தித்து விஜய் நலம் விசாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here