நடிகர் ரஜினி தான், இப்படியான சூழலை ஏற்படுத்தினார்

Rajinikanth-starrer Darbar did not do well at the box office as expected is now out in the open. Distributors of the movie, which hit more than 4,000 screens in the country on January 9, are now demanding compensation from Rajinikanth for the losses.

0
266

நடிகர் ரஜினி நடித்த தர்பார் படம் ஜனவரி 9 ஆம் தேதி வெளியானது. லைகா தயாரிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய இந்தப் படத்தை வாங்கிய வினியோகஸ்தர்கள், தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறியிருந்தனர். இதற்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோரை சந்திக்க விநியோகஸ்தர்கள் முயற்சி செய்தனர். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டதாக தகவல் வெளியானது.

இந்த சம்பவத்திற்கு ஏ.ஆர்.முருகதாஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று விநியோகஸ்தர்கள் சென்னையில் போஸ்டர் ஒட்டினார்கள். இந்நிலையில், தர்பார் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் இழப்பீடு கோரி மிரட்டுவதாக குற்றஞ்சாட்டி, போலீஸ் பாதுகாப்பு கேட்டு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இதுகுறித்து, இயக்குனர்கள் சங்க தலைவர், ஆர்.கே.செல்வமணியிடம் கேட்டபோது, ”தயாரிப்பாளர்களிடம் இருந்து தான், வினியோகஸ்தர்கள் படத்தை வாங்குகின்றனர். படம் வெற்றி பெற்றால், நடிகர், இயக்குனர்களுக்கு, லாபத்தில் ஒரு பங்கை அளிக்கின்றனரா?

”வசூல் ஆகவில்லை என்றால், பணத்தை திருப்பி வாங்கி விடலாம் என்ற எண்ணத்திலேயே, அவர்கள் உள்ளனர். நடிகர் ரஜினி தான், இப்படியான சூழலை ஏற்படுத்தினார். அது, அவர் செய்த தவறு. இனியும், வினியோகஸ்தர்களின் இப்போக்கை அனுமதிக்க முடியாது. ஏ.ஆர்.முருகதாஸுக்கு, இயக்குனர்கள் சங்கம் துணை நிற்கும்,” என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here