தென்னிந்திய நடிகர்‌ சங்கத்‌ தேர்தலை ரத்து செய்து சென்னை உயர்‌ நீதிமன்றம்‌ உத்தரவிட்டுள்ளது.

தென்னிந்திய நடிகர்‌ சங்கத்‌ தேர்தல்‌ கடந்த 2019-ஆம்‌ ஆண்டு ஜூன்‌ மாதம்‌ 23-ஆம்‌ தேதி நடைபெற்றது. இந்த தேர்தலை ஒத்திவைத்து சங்கங்களின்‌ பதிவாளர்‌ உத்தரவு பிறப்பித்தார்‌. இந்த உத்தரவை எதிர்த்து,நடிகர்‌ விஷால்‌ சென்னை உயர்நீதிமன்றத்தில்‌ வழக்குத்‌ தொடர்ந்தார்‌.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம்‌, திட்டமிட்டப்படி தேர்தலை ஜூன்‌ 23-ஆம்‌ தேதியன்று நடத்தவும்‌,மறு உத்தரவு பிறப்பிக்கும்‌ வரை தேர்தலில்‌ பதிவான வாக்குகளை எண்ணக்கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த நிலையில்‌ சென்னை உயர்நீதிமன்றத்தில்‌ பெஞ்சமின்‌, ஏழுமலை ஆகியோர்‌ தாக்கல்‌ செய்த மனுவில்‌, ‘நடந்து முடிந்த தென்னிந்தியத்‌ திரைப்பட நடிகர்‌ சங்கத்‌ தேர்தலில்‌
வாக்களிக்க அனுமதிக்கவில்லை. வெளியூர்களில்‌ உள்ள சங்கத்தின்‌ உறுப்பினர்கள்‌ தபால்‌ மூலம்‌ வாக்களிக்க வேண்டும்‌. ஆனால்‌ தேர்தலுக்கு முதல்‌ நாள்‌ வரை வாக்களிக்கும்‌ படிவம்‌ எங்களுக்கு கொடுக்கப்படவில்லை. எனவே, இந்தத்‌ தேர்தலை ரத்து செய்ய வேண்டும்‌’ என கோரியிருந்தனர்‌.

நடிகர்‌ சங்கத்தை நிர்வகிக்க தனி அதிகாரியை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து நடிகர்‌ சங்கத்தின்‌ தலைவர்‌ நாசர்‌, மற்றும்‌ பொருளாளர்‌ கார்த்தி சார்பில்‌ வழக்கு தொடர்ந்திருந்தனர்‌.அனைத்து வழக்குகளையும்‌ விசாரித்த உயர்நீதிமன்றம்‌, தேதி குறிப்பிடாமல்‌ தீர்ப்புக்காக
ஒத்திவைத்திருந்தது.

இந்நிலையில்‌ தென்னிந்திய நடிகர்‌ சங்கத்‌ தேர்தலை ரத்து செய்து சென்னை உயர்‌ நீதிமன்றம்‌ உத்தரவிட்டுள்ளது. அரசின்‌ உத்தரவுகளை எதிர்த்து நாசர்‌, விஷால்‌, கார்த்தி தாக்கல்‌ செய்த மனுக்களைத்‌ தள்ளுபடி செய்துள்ளது. புதிய நடிகர்‌ சங்க உறுப்பினர்‌ பட்டியலைத்‌ தயாரித்து 3 மாதங்களுக்குள்‌ நடிகர்‌ சங்கத்‌ தேர்தலை நடத்த வேண்டும்‌ என்று உயர்‌ நீதிமன்றம்‌ உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here