நடிகர் அஜித்தை நினைத்து பார்க்க வேண்டும் : வாசுகி பாஸ்கர்

Actor Sushant died by suicide last week, at the age of 34. He was suffering from depression. Following his death, the focus has once again been set on nepotism in the film industry.

0
539

இளம் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் தற்கொலையைத் தொடர்ந்து கடந்த ஒரு வாரகாலமாகவே பல்வேறு பாலிவுட் நட்சத்திரங்கள், துறையில் இருக்கும் அரசியல் பற்றி, அவர்களுக்குக் கிடைத்த மோசமான அனுபவங்கள் பற்றி வெளிப்படையாகப் பேச ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில் பிரபல ஆடை வடிவமைப்பாளர் வாசுகி பாஸ்கர் தனது டிவிட்டர் பக்கத்தில், “சம்பளம் வழங்கப்படாமல், ஆதரவில்லாமல், அங்கீகாரம் அளிக்கப்படாமல் நமது தமிழ் சினிமா திரையில் ஏராளமான சுஷாந்த்கள் உள்ளனர். வலிகளை மறைத்துக் கொண்டு கேமரா முன் புன்னகைக்கும் அவர்களில் ஒரு சிலர் மட்டுமே அது பற்றி என்னிடம் பேசியிருக்கிறார்கள். சிலர் வலிகளை தங்களுக்குள் வைத்துக்கொண்டு அமைதியாக கடந்து போகிறார்கள். அவர்களை போன்றவர்கள் நடிகர் அஜித்தை நினைத்து பார்க்க வேண்டும்”, என குறிப்பிட்டு அஜித் ஆரம்ப காலத்தில் ஒதுக்கப்பட்டதை நினைவுப்படுத்தியுள்ளார்.

அவரது இந்த பதிவு அஜித் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here