ஏ.ஆர்.ரஹ்மான் விரைவில் ஒளிபரப்பாக உள்ள ‘தி வாய்ஸ்’ எனும் தொலைக்காட்சி இசை தொடர்பான நிகழ்ச்சியில் நடுவராகப் பங்கேற்கிறார். இந்நிகழ்ச்சி, இளம் பாடகர்களுக்கான குரல் திறன்போட்டியாக நடத்தப்படும் ஒரு சர்வதேச நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகிறது.

அதற்கான விளம்பரப் படப்பிடிப்பின்போது ரஹ்மான், ”திரைப்படங்களில் தங்களுக்கான பாடல்களை நடிகர்களே பாடுவது உலகம் முழுக்கவே பொதுவாக நடைமுறையில் இருக்கும் ஒன்றுதான்.

நடிகர்கள் தங்கள் நடிப்பில் வெளியாகும் படத்திற்காக பாடும் பாடலைப் பதிவு செய்யும் முன் அவர்களுக்கு முறையான பயிற்சி அவசியம். அதற்காக அவர்கள் போதுமான நேரம் எடுத்துக்கொள்ள வேண்டும். இன்றைய நாட்களில், நடிகர்கள் மிகவும் பரபரப்பான ஷெட்யூல்களில் பிஸியாக இருக்கிறார்கள்.

அவர்கள் தாங்கள் தொடர்ந்து ஒப்பந்தமான பொறுப்புகளையே ஏமாற்றித் தப்பிக்கும் நிலையில் இருக்கிறார்கள். அதையெல்லாம் விட்டுவிட்டு தங்கள் பாடல்களைப் பாடுவதற்கு பயிற்சியெடுக்க நேரமில்லாத ஒரு இக்கட்டான சூழல்தான் அவர்களுக்கு உள்ளது.

என்றாலும், ஒருவேளை பயிற்சிக்குத் தேவையான நேரத்தை ஒதுக்க முடியும் என்று அதில் ஈடுபட்டால் அவர்களது படத்தில் அவர்களே பாடுவதென்பது மிகமிக அற்புதமான ஒரு யோசனையாக இருக்கும்”. எனத் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here