நடிகனாகி இருந்தால் ஜெயலலிதாவுடன் படம் நடித்திருப்பேன் – சட்டசபையில் துரைமுருகன்

0
567

சிறு வயதில் நடிப்பை தொடர்ந்து இருந்தால், சினிமாவில் ஜெயலலிதாவுடன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கும் என்று சட்டசபையில் திமுகவை சேர்ந்த துரைமுருகன் பேசியுள்ளார்.

இன்று சட்ட சபையில் பேசிய துரைமுருகன், இந்த அவையில் எல்லோரும் நடிக்கிறார்கள். ஆளும் கட்சி, எதிர் கட்சி, சபாநாயகர் என்று எல்லோரும் நடிக்கிறார்கள். ஷேக்ஸ்பியர் எல்லா அரசியல்வாதிகளும் நடிகர்கள் என்று கூறினார், அதேபோல்தான் இங்கும் எல்லோரும் நடிக்கிறார்கள், என்றார். இதற்கு சபாநாயகர், ஆமாம் எல்லோரும் நடிக்கிறார்கள், நீங்களும் நடிக்கிறீர்களா? நீங்கள் இதற்கு முன்பு நடித்து இருக்கிறீர்களா என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு துரைமுருகன், ஆம் நான் நன்றாக நடிப்பேன். சிறு வயதில் இருந்தே நாடகத்தில் நடித்து இருக்கிறேன். பின் நடிப்பதை விட்டுவிட்டேன். நான் நடிப்பதை தொடர்ந்து இருந்திருந்தால், ஒருவேளை சினிமாவில், ஜெயலலிதாவுடன் நடித்திருப்பேன் என்று கூறினார். அவரின் இந்த பதிலை கேட்டு அவை மொத்தமும் சிரிக்க தொடங்கியது. துரைமுருகனும் சிரித்துக் கொண்டே இருக்கையில் அமர்ந்தார்.

அதற்கு பின்பு பேசிய துணை முதலவர் பன்னீர் செலவம் “2001- 2006-ம் ஆண்டு ஆட்சியின் போது துரைமுருகனை பார்த்து அன்றைய முதல்- அமைச்சர் ஜெயலலிதா, ‘நீங்கள் சிறப்பாக நடிக்கிறீர்கள். நவரச நடிப்பும் உங்களிடம் இருக்கிறது. நீங்கள் நடிகராகி இருந்தால் உலக நடிகர் ஆகி இருக்கலாம்’ என்று சொன்னார். அந்த வார்த்தைதான் இப்போது என் நினைவுக்கு வருகிறது என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here