“நடராஜனின் உறுப்பு மாற்றத்தை விமர்சிப்பது சரியல்ல”: தமிழிசையிடமிருந்து முரண்படும் எஸ்.வி.சேகர்

சசிகலா கணவர் நடராஜனின் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை விமர்சித்த தமிழிசையின் கருத்திலிருந்து வேறுபடுகிறார் எஸ்.வி.சேகர்

0
699

”சசிகலாவின் கணவர் நடராஜனின் உறுப்பு மாற்றத்தை விமர்சிப்பது சரியல்ல; அவரும் ஓர் உயிர்தான்” என்று பாரதிய ஜனதா கட்சியின் தமிழக கொள்கைப் பரப்புச் செயலாளரும் நடிகருமான இப்போது டாட் காமிடம் தெரிவித்தார். இப்போது டாட் காமுக்கு வழங்கிய 58 நிமிட நேர்காணலில் “ரஜினி, கமல் இருவரும் அரசியலுக்கு வந்தாலும் தனித்து ஆட்சி அமைக்கிற அளவுக்குப் பலம் பெற முடியாது; இதற்குக் காரணம், தி.மு.கவில் எந்த வெற்றிடமும் இல்லை. அவர்களுடைய வாக்கு வங்கி சிதறவில்லை; அ.தி.மு.கவின் வாக்கு வங்கியே சிதறி வந்து ரஜினி, கமலுக்கு வலு சேர்க்கும். ஆனால் அந்த எண்ணிக்கை தனித்து ஆட்சி அமைக்க போதுமானதாக இருக்காது” என்று எஸ்.வி.சேகர் கூறினார்.

“முன்னேறிய சாதி மக்களில் திறமைசாலிகளுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிற நிலைமை தொடரக்கூடாது” என்று சேகர் இந்த நேர்காணலில் கூறினார். முழுமையான பேட்டியை இங்கே பாருங்கள்:

அன்புச் சொந்தங்களே, கீழேயுள்ள GIVE 5 பொத்தானை அழுத்தி இப்போதுவுக்கு நன்கொடை வழங்குங்கள்; சந்தேகங்களை நிவர்த்தி செய்ய +919445515340ஐ அழையுங்கள்:

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்