ஜிஎஸ்டி வருவாய் குறைவு

0
289

2018 அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும்போது நடப்பாண்டில் ஜிஎஸ்டி வருவாய் 5.29% குறைந்துள்ளது என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் மாதம் மொத்தம் ரூ.95,380 கோடி ஜிஎஸ்டி வசூல் செய்யப்பட்டுள்ளது என்றும் மத்திய நிதி அமைச்சகம் தகவல் அளித்துள்ளது.


இதில் மத்திய ஜிஎஸ்டி ரூ.17,582 கோடி, மாநில ஜிஎஸ்டி ரூ.23,674 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.46,517 கோடி (இறக்குமதி வரி ரூ.21446 கோடி உள்பட) ஆகும்.

செஸ் எனப்படும் கூடுதல் வரி ரூ.7,607 கோடி வசூலாகி உள்ளது. இதில், இறக்குமதி மீதான ரூ.774 கோடி வரியும் அடங்கும். மொத்த ஜிஎஸ்டி வரி வசூல் செப்டம்பர் மாதத்தை ஒப்பிடுகையில் ரூ.2536 கோடி அதிகம். செப்டம்பர் மாதம் முதல் அக்டோபர் 31-ம் தேதி வரை மொத்தம் 73.83 லட்சம் பேர் ஜிஎஸ்டிஆர் 3பி ரிட்டன் தாக்கல் செய்துள்ளதாகவும் நிதித்துறை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here