த்ரிஷா நடிக்கும் ராங்கி படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

எங்கேயும் எப்போதும் சரவணன் இயக்கத்தில் தயாராகிவரும் படம் ராங்கி. சரவணனின் குரு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ராங்கி படத்தின் கதையை எழுதியுள்ளார். திரைக்கதை வசனம் சரவணன்.

ஆக்ஷன் கலந்த த்ரில்லர் படமாக உருவாகிவரும் ராங்கி ஒரு நாயகி மையப்படமாகும். இதன் கிளைமாக்ஸ் காட்சியை எடுக்க விரைவில் த்ரிஷா உள்ளிட்ட படக்குழு உஸ்பெகிஸ்தான் செல்ல உள்ளது. அங்கு 20 தினங்கள் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர். 

லைகா தயாரித்துவரும் ராங்கியின் பர்ஸ்ட் லுக்கை நேற்று வெளியிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here