கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியால் தோல் ஏற்றுமதிக்கான ஆர்டர்கள் திரும்ப பெறப்பட்டுள்ளது. இதனால் 75 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டு 5 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தொழிலதிபர்கள் தெரிவித்தனர். இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகத்தில் தோல் மற்றும் தோல் பொருட்கள் முக்கிய இடத்தை பிடித்துள்ளது.

வேலூரில் வாணியம்பாடி, ஆம்பூர், பேரணாம்பட்டு, மேல்விஷாரம், ராணிப்பேட்டை ஆகிய பகுதிகளில் மட்டும் 300 தோல் தொழிற்சாலைகளும், 400 ஷூ மற்றும் கையுறை தொழிற்சாலைகளும் உள்ளது. இந்த தொழிற்சாலைகள் மூலம் 5 லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர்.

hhh

இங்கு தயாராகும் தோல் பொருட்கள் அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஹாங்காங், நெதர்லாந்து, பெல்ஜியம், ஸ்பெயின், ரஷியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட உலகின் அனைத்து நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன்மூலம் ஆண்டுக்கு இந்தியாவுக்கு 40 ஆயிரம் கோடிக்கு அன்னிய செலவாணி கிடைக்கிறது.

கடந்த 2014-15ம் ஆண்டில் 6.49 பில்லியன் அமெரிக்க டாலர், 2015-16ல் 5.83 பில்லியன் டாலர், 2016-17ல் 5.66 பில்லியன் டாலர் என வர்த்தகம் குறைந்து கொண்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக தோல் மற்றும் தோல் பொருட்கள் தயாரிக்கும் தொழில் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் ஆயிரம் கோடி டாலர் (இந்தியா ரூபாய் மதிப்பு 75 ஆயிரம் கோடி) ஏற்றுமதிக்கான ஆர்டர் திரும்ப பெற்றதால் லாக்டவுன் முடிந்தாலும் இத்தொழில் செய்யமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

LLL

எனவே, தொடர்ந்து தொழிற்சாலை இயங்காமல் இருப்பதால் இயந்திரங்கள் பழுதாகி இருக்கும். லாக் டவுன் முடிந்து தொழிற்சாலை இயக்கவேண்டும் என்றால் அனைத்து இயந்திரங்களையும் பழுது பார்த்த பின்னரே புதிய தொழிற்சாலையை இயக்குவதுபோல்தான் பணிகளை மேற்கொள்ள வேண்டியது வரும்.

அதுமட்டும் இல்லாமல் ஏற்றுமதிக்கான ஆர்டர் இல்லாததால் தொழிலாளர்களுக்கு என்ன வேலை கொடுக்கணும் என்று தெரியாமல் நிலை உள்ளதால் தோல் தொழிலின் எதிர்க்காலம் கேள்விக்குறியாக உள்ளது. ஆகையால் அரசு உதவி இல்லாமல் தோல் தொழிற்சாலைகள் நடத்த முடியாது என்பது தோல் தொழிற்சாலை அதிபர்களின் கருத்தாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here