ஸ்பெயின் நாட்டில் 70 பேர் கலந்து கொண்டு நடத்திய  நிர்வாண போராட்டம் உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

ஸ்பெயின் நாட்டின் கேட்டலோனியா சதுக்கத்தில் தோல் ஆடை உற்பத்திக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. அதன் புகைப்படங்கள் தற்போதுதான் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக் கிழமை கேட்டலோனியா Black Friday சேல் நடைபெற்றது. அதில் தோல் ஆடைகள் மற்றும் ஃபர் ஆடைகளின் விற்பனையைக் கண்டித்து 70 பேர்கொண்ட விலங்கு நல ஆர்வலர்கள் நிர்வாணமாக போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தை விலங்குகள் நல உரிமைக்கான அமைப்பு ஏற்பாடு செய்தது.

ஃபர் ஆடைகளுக்காக ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான விலங்குகள் கொல்லப்படுகின்றன. இதனை தடை செய்ய வேண்டும் என ஸ்பானிஷ் அதிகாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஜெர்மனி, ஐரோப்பா என பல  நாடுகளில் தோல் உற்பத்தி ஆடைகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில் ஸ்பெயின் நாட்டிலும் தடை விதிக்க வேண்டும் என்பதே இந்த விலங்கு நல ஆர்வலர்களின் கோரிக்கை.

போராட்டத்தில் 70 விலங்கு ஆர்வலர்கள் ஒருவர்மீது ஒருவர் உடைகளின்றி படுத்துக்கொண்டுள்ளனர். அவர்களின் மேல் ரத்தம் சொட்டுவதுபோல் சிவப்பு சாயம் தெளித்துள்ளனர்.

இதன் அர்த்தம் விலங்குகளின் தோல்கள் அகற்றப்பட்டு கொத்து கொத்தாக இரத்தம் சொட்ட சொட்ட குவித்து வைத்திருப்பதைப் போல் சித்தரிக்கும் விதமாக அவர்கள் அவ்வாறு நிர்வாணமாக படுத்து தமதுகடும்   எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here