தோல்வி எதிரொலி ; உத்தரபிரதேசம், ஒடிசா காங்கிரஸ் தலைவர்கள் ராஜினாமா

0
345

ஒடிஷாவில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததற்கு பொறுப்பேற்று அம்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் நிரஞ்சன் பட்நாயக், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 351  தொகுதிகளைக்  கைப்பற்றியுள்ளது. பாஜக, தனிப் பெருபான்மையுடன் ஆட்சியமைக்கிறது. காங்கிரஸ் கட்சி 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. 

உத்தரபிரதேச மாநிலத்தில் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே காங்கிரஸ் கட்சி வென்றுள்ளது. இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் கிடைத்த படுதோல்விக்கு பொறுப்பேற்று, அம்மாநில காங்கிரஸ் தலைவரும் நடிகருமான ராஜ் பப்பார் ராஜினாமா செய்துள்ளார்.

அதே போல ஒடிஷா காங்கிரஸ் கட்சித் தலைவர் நிரஞ்சன் பட்நாயக்கும் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, ஒடிஷாவில் மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்துள்ளது.

தோல்விக்குப் பொறுப்பேற்று நான் எனது ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அனுப்பிவிட்டேன். இளைஞர்களிடையே கட்சியை வளர்க்க, வலுவான அடிதளத்தை அமைக்க வேண்டியது அவசியம் என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here