இஸ்ரோவின் 100வது செயற்கைக்கோளான ‘கார்ட்டோ சாட்-2’ வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது.

ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து, வெள்ளிக்கிழமை (இன்று) காலை 9.28 மணிக்கு பி.எஸ்.எல்.வி., – சி 40 ராக்கெட் மூலம், ‘கார்ட்டோ சாட் – 2′ செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டு, 17வது நிமிடத்தில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. தகவல் தொடர்பு மற்றும் போக்குவரத்து போன்றவைகளை மேம்படுத்தும் வகையில் இந்த செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பி.எஸ்.எல்.வி., – சி 40 ராக்கெட் மூலம், கனடா, ஃபின்லாந்து, பிரான்ஸ், கொரியா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய ஆறு நாடுகளுக்குச் சொந்தமான 28 செயற்கைக்கோள்களுடன், இந்தியாவுக்குச் சொந்தமான மூன்று செயற்கைக்கோள்களும் விண்ணில் செலுத்தப்பட்டன.

கடந்தாண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதியன்று, கடல்சார் செயல்பாடுகளைக் கண்காணிக்க ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1-எச் செயற்கைக்கோள், பிஎஸ்எல்வி சி-39 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. ஆனால் இந்த முயற்சி தோல்வியில் முடிவடைந்தது.

இதையும் படியுங்கள்: ஒக்கி: கண்ணுக்குப் புலப்படாத மக்களுக்கு நடந்த கண்ணுக்குப் புலப்படாத பேரிடர்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்