தோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பன்ட்

Left-handed batsman #RishabhPant on Tuesday became the fastest Indian wicketkeeper to score 1,000 runs in Test cricket.

0
126

இந்திய விக்கெட் கீப்பர்களில், டெஸ்ட் கிரிக்கெட்டில் 1000 ரன்களை விரைவாக எடுத்த இந்திய விக்கெட் கீப்பர் என்கிற பெருமையை ரிஷப் பந்த் பெற்றுள்ளார்.

இதன்மூலம், குறைந்த இன்னிங்ஸில் 1000 ரன்களை கடந்த தோனியின் சாதனையை முறியடித்து ரிஷப் பன்ட் சாதனை படைத்துள்ளார்.

இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 5-ஆவது டெஸ்ட் போட்டிபிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது. இந்தியா இந்தப் போட்டியில் வெற்றிப்பெற்று தொடரை கைப்பற்ற தீவிரமாக போராடி வருகிறது.

5 ஆம் நாள் தேநீர் இடைவேளையின்போது இந்திய அணி, 76 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் எடுத்துள்ளது. 200 பந்துகளில் 52 ரன்களுடன் புஜாராவும் 70 பந்துகளில் 33 ரன்களுடன் ரிஷப் பந்தும் களத்தில் உள்ளார்கள்.

இந்தப் போட்டியில் ரஹானே அவுட்டானதும் பேட் செய்ய வந்த ரிஷப் பன்ட், தனது 1000 ரன்களை கடந்தார். அவர் இந்தச் சாதனையை 27 இன்னிங்ஸில் செய்துள்ளார்.

இதற்கு முன்பு இந்திய விக்கெட் கீப்பர்களில் தோனி 32 இன்னிங்ஸில் 1000 ரன்களை கடந்தார். இப்போது குறைவான இன்னிங்ஸில் 1000 ரன்களை கடந்து தோனியின் சாதனையை முறியடித்துள்ளார் ரிஷப் பன்ட்.

இதற்கு முன்பு 1000 ரன்களை கடந்த இந்திய பேட்ஸ்மேன்களில் பரூக் இஞ்சினீர், சாஹா, நயன் மோங்கியா உள்ளிட்டோரின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here