தற்போது உலக அளவில் அதிகம் பயன்பாட்டில் உள்ள மொபைல் வலையமைப்பு தொழில்நுட்பமாக 4G காணப்படுகின்றது. எனினும் கடந்த ஆண்டு முதல் சில நாடுகளில் 5G தொழில்நுட்பமும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. எவ்வாறெனினும் உலகின் பெருமளவான நாடுகள் 5G தொழில்நுட்பத்தினை அனுபவிக்க ஆரம்பிக்கும் முன்னரே 6G தொழில்நுட்பத்தினை உருவாக்கும் முயற்சியில் பல்வேறு நிறுவனங்கள் இறங்கியுள்ளன. இந்த வரிசையில் Alliance for Telecommunications Industry Solutions (ATIS) என்னும் நிறுவனத்துடன் இணைந்து 6G தொழில்நுட்பத்தினை உருவாக்கும் முயற்சியில் ஆப்பிள் நிறுவனமும் இணைந்துள்ளது.

ஆப்பிள் நிறுவனம் மாத்திரமன்றி மேலும் 10 நிறுவனங்கள் Alliance for Telecommunications Industry Solutions (ATIS) இன் கீழ் இணைந்துள்ளன. அதாவது Charter, Cisco, Google, Hewlett-Packard, Intel, Keysight Technologies, LG, Mavenir, MITRE மற்றும் VMware ஆகிய நிறுவனங்களும் இணைந்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here