தொழிற்சாலைகள் நாட்டின் கோயில்கள்,மூடக்கூடாது ; ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக பாபா ராம்தேவ்

0
476

வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வாலைச் சந்தித்தபின் , தொழிற்சாலைகள் நாட்டின் முன்னேற்றத்துக்கான கோயில்கள் அதை மூடக்கூடாது என்று ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக பாபா ராம் தேவ் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் செயல்பட்டுவந்த வேதாந்தா குழுமத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படுகிறது, மக்களின் உடல்நலத்துக்கு பிரச்சினை ஏற்படுகிறது எனக் கூறி அப்பகுதிமக்கள் போராட்டம் நடத்தினார்கள். அந்த ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி 100 நாட்களாகப் போராட்டம் நடத்தினர்.

100-வது போராட்டத்தின்போது மக்கள் மீது போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தார்கள், பலர் படுகாயமடைந்தனர். இச்சம்பவத்தை அடுத்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடத் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது .அந்த ஆலைக்கு வழங்கப்பட்ட மின் இணைப்பையும் துண்டித்தனர்.

இந்நிலையில்,வேதாந்தா குழுமத்தின் தலைவரும், ஸ்டெர்லைட் ஆலையின் நிறுவனருமான அனில் அகர்வாலையும், அவரின் மனைவியையும் , பாபா ராம் தேவ் சந்தித்துப் பேசினார். அதன்பின் பாபா ராம்தேவ் தனது டிவிட்டர் பக்கத்தில் ஸ்டெர்லைட் ஆலையின் பெயரைக் குறிப்பிடாமல் தொழிற்சாலைகள் நாட்டின் முன்னேற்றத்துக்கான கோயில்கள் அதை மூடக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.

பாபா ராம் தேவ் தன் டிவிட்டர் பக்கத்தில் “நான் லண்டன் சென்றிருந்தபோது, வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வாலைச் சந்தித்தேன். நம்நாட்டைக் கட்டமைக்கும் பணிக்காகவும், பொருளாதார வளர்ச்சிக்காகவும், லட்சக்கணக்கான மக்களுக்கு வேலை அளித்துவரும் அவரின் பங்களிப்பை வணங்குகிறேன் .

சில சர்வதேச சதிகாரர்கள் தூத்துக்குடியில் அப்பாவி உள்ளூர் மக்களைப் பயன்படுத்தி வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போரட்டத்தில் ஈடுபட வைத்ததனர். நாட்டின் வளர்ச்சிக்குத் தொழிற்சாலைகள்தான் கோயில்கள். தொழிற்சாலைகளை ஒருபோதும் மூடக்கூடாது என்றும் டிவீட் செய்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here