மத்திய அரசுக்கு பாக்கித் தொகையை செலுத்த தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு 10 வருடம் அவகாசம் கொடுத்துள்ளது. உச்சநீதிமன்றம். செல்போன் விற்பனை, டிவிடென்ட் உள்ளிட்ட பிற வருவாய்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டு அதற்கேற்ப கட்டணம் செலுத்த வேண்டும் என புதிய வருவாய் பங்கீட்டு முறையை மத்திய அரசு கொண்டுவந்தது. இதன்படி, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மத்திய அரசுக்கு 92,000 கோடி ரூபாய் செலுத்த வேண்டும். இந்த தொகையை உடனடியாக மத்திய அரசுக்கு செலுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்தது.  

ஆனால் மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய 92,000 கோடி ரூபாயை தவணை முறையில் செலுத்த அனுமதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி அருண் மிஷ்ரா தலைமையிலான அமர்வு முன்னிலையில், விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்,நீதிபதி அமித் மிஸ்ரா தலைமையிலான எஸ்.அப்துல் நசீர், எம்.ஆர் ஷா கொண்ட அமர்வு வழக்கின் தீர்ப்பை இன்று வழங்கியது.

நீதிபதி வழங்கிய தீர்ப்பில், அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகையில் 10 சதவீதத்தை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் உடனே கட்ட வேண்டும். 10 சதவீதம் தொகையை அடுத்த வருடம் மார்ச் 31-ந்தேதிக்குள் கட்ட வேண்டும். மொத்த வருவாயை செலுத்த தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு 10 ஆண்டுகள் அவகாசம் வழங்கப்படுகிறது. 2021 ஏப்ரல் 1-ந்தேதியில் இருந்து இதற்கான காலம் தொடங்குகிறது. 2031 மார்ச் 31-ந்தேதிக்குள் தவணமுறையில் கட்டி முடிக்க வேண்டும். ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 7-ந்தேதி்க்குள் அதை முடித்திட வேண்டும். இல்லையெனில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here