ஆண், பெண் இரு பாலாருக்குமே மிகப் பெரிய பிரச்சனையாக இருப்பது வயிற்றில் தேங்கியிருக்கும் கொழுப்பு. இந்த தொப்பையை நம் வீட்டிலேயே உள்ள எளிய உணவு பொருட்கள் மூலம் குறைக்க முடியும்.

1. வெள்ளரிக்காய்ஜூஸ்

தேவையான பொருட்கள்
வெள்ளரிக்காய் – 1
எலுமிச்சை – 2
புதினா – சிறிது
துருவிய இஞ்சி – 2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் – தேவையான அளவு

வெள்ளரிக்காய் ஜூஸ் செய்யும் முறை:

முதலில் வெள்ளரிக்காயை அரைத்து, அதில் எலுமிச்சை சாறை கலந்து கொள்ளவும். பொடியாக நறுக்கிய புதினா மற்றும் இஞ்சியை உடன் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும். இந்த ஜூஸை தினமும் காலையில் எழுந்ததும் தினமும் குடித்து வந்தால், 15 நாட்களிலேயே தொப்பை குறைவதை உங்களால் உணர முடியும்.

2. பூண்டுஜூஸ்

தேவையான பொருட்கள்:
பூண்டு – 3 பற்கள்
தேன் – 1 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை – 1
வெதுவெதுப்பான நீர் – தேவையான அளவு

பூண்டு ஜூஸ் செய்யும் முறை:

வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சையின் சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் பூண்டு பற்களை வாயில் போட்டு மென்று விழுங்கிய பின், இந்த ஜூஸைக் குடிக்க வேண்டும். ஒருவேளை உங்களால் பூண்டு பற்களை சாப்பிட முடியாவிட்டால், அதனை தட்டி ஜூஸ் உடன் சேர்த்து கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

இவ் இரு மூலிகைச் ஜூஸ்களைத் தொடர்ந்து குடித்து வந்தால் , 15 நாட்களிலேயே நல்லதொரு மாற்றத்தை உணர்வதோடு மட்டுமல்லாமல் தொப்பை பிரச்சனையில் இருந்து விடுபட்டு உங்கள் உடல் எடையை நீங்கள் குறைக்கலாம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here