குளிர்காலம் தொடங்கி விட்டதால் சளி, இருமல் மற்றும் காய்ச்சல் நம்மை எப்போது வேண்டுமானாலும் தாக்கக்கூடும். மேலும் காற்றில் மாசு நிறைந்திருப்பதால், அது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் கெடுக்க நேரிடும். இதனால் நுரையீரலில் சளி, தும்மல், இருமல் போன்ற உபாதைகள் வரக்கூடும். இதனை முன்கூட்டியே வராமல் தடுக்க மிக எளிமையான குறிப்பு உங்களுக்காக.

ஆயுர்வேத கஷாசம் செய்வது எப்படி?

தண்ணீர் – ஒரு கப்

இஞ்சி – 1 துண்டு

துளசி – 4 -5 இலைகள்

மஞ்சள் – ஒரு சிட்டிகை

மிளகு – 5

தேன் – 1 தேக்கரண்டி

கல் உப்பு – ஒரு சிட்டிகை


news 4A.001
1. அடுப்பில் ஒரு கடாய் வைத்து, அதில் தண்ணீர் ஊற்றவும். தண்ணீரை நன்கு கொதித்த பின் அதில் இஞ்சி, துளசி, மஞ்சள் மற்றும் மிளகு சேர்க்கவும்.

2. பின் அடுப்பை சிம்மில் வைத்து, ஒரு கப் தண்ணீர் அரை கப் நீராகும் வரை கொதிக்க விட்டு இறக்கி ஒரு கப்பில் ஊற்றவும். அத்துடன் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து தினசரி இந்த கஷாயத்தை குடித்து வரலாம். நீங்கள் விரும்பினால் கல் உப்பு சேர்த்தும் பருகலாம்.

3. தொண்டை பிரச்சனைகளுக்கு சிறந்த ஆயுர்வேத தீர்வாக இருக்கும் இந்த கஷாயம் வீட்டிலேயே மிக எளிமையாக செய்யலாம்.


Ndtv

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here