விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. முதலாவது டெஸ்டில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து தொடரில் 1-0 என்ற கணக்கில் பின்தங்கி இருக்கிறது.

இந்நிலையில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் ஸ்டேடியத்தில் நேற்று(வியாழக்கிழமை) ஆரம்பிக்கவிருந்தது.

715974-lords-play-called-off-reuters

தொடர்ந்து பெய்த மழையால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. தொடர்ந்து மழைத்தூறல் இருந்த காரணத்தால் மதிய உணவு இடைவேளை வரை ஆட்டம் தொடங்கப்படவில்லை.

தொடர்ந்த மழைத்தூறலால் முதல் நாள் ஆட்டம் கைவிடப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர். அதன்படி ஒரு பந்து கூட வீசப்படாமல் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்