இங்கிலாந்து சென்றுள்ள ஆஸ்திரேலியா அணி 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே விளையாடிய 3 போட்டிகளிலும் ஆஸ்திரேலியா படு தோல்வி அடைந்தது.
உலக சாதனையாக 485 ரன்களை இங்கிலாந்து தனது 3 ஒரு நாள் போட்டியில் குவித்தது.

இந்நிலையில் நேற்று நான்காவது ஒருநாள் போட்டி செஸ்டர் லீ ஸ்டிரீட் நகரில் உள்ள ரிவர்சைட் மைதானத்தில் நடைபெற்றது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஆரோன் பிஞ்ச் 100 . மற்றும் டிராவிஸ் ஹெட் 63 ரன்கள், இதன் பின் சிறப்பாக ஆடிய ஷான் மார்ஷ் 101 ரன்களில் அவுட்டாகினார்

அடுத்து இறங்கிய வீரர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை.
இறுதியில், ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 310 ரன்கள் எடுத்துள்ளது.

இங்கிலாந்து அணி சார்பில் டேவிட் வில்லி 4 விக்கெட்டுகளும், மார்க் வுட், அடில் ரஷித் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

இதையடுத்து, 311 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஜேசன் ராய், பேர்ஸ்டோவ் ஆகியோர்
முதலில் இருந்தே அடித்து ஆட அணியின் எண்ணிக்கை கடகடவென உயர்ந்தது. அணியின் எண்ணிக்கை 174 ஆக இருக்கும்போது ஜேசன் ராய் 83 பந்துகளில் 2 சிக்சர், 12 பவுண்டரியுடன் 101 ரன்களுடன் ஆட்டமிழந்தார்.

அதன் பின் பேர்ஸ்டோவ் 66 பந்துகளில் 10 பவுண்டரியுடன் 79 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து ஆடிய அலெக்ஸ் ஹேல்ஸ் 34 ரன்களுடனும், ஜோஸ் பட்லர் அதிரடியாக 29 பந்துகளில் ஒரு சிக்சர், 9 பவுண்டரியுடன் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமலும் இருந்தனர்.

இங்கிலாந்து அணி 44.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 314 ரன்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜேசன் ராய் ஆட்ட நாயகன் விருதை பெற்றார். அத்துடன் தொடரை 4-0 என கைப்பற்றியது.

ஆஸ்திரேலியாசார்பில் ஆஷ்டன் அகர் 2 விக்கெட்டும், பில்லி ஸ்டான்லேக் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here