இலங்கை ராணுவ தளபதி, கடந்த மாதம் 21ஆம் தேதி தொடர் குண்டுவெடிப்புகளை நிகழ்த்திய தற்கொலை பயங்கரவாதிகள், இந்தியாவின் காஷ்மீர், கேரளா, பெங்களூரு போன்ற பகுதிகளுக்கு வந்து சென்றது கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து இலங்கையிலிருந்து கடந்த 6 மாதங்களில் இந்தியா வந்த சுற்றுலா பயணிகள் குறித்து விசாரணை தொடங்கி உள்ளது. குறிப்பாக காஷ்மீர், பெங்களூரு மற்றும் கேரளா போன்ற மாநிலங்களுக்கு சென்ற இலங்கைச் சேர்ந்தவர்களின் பின்புலம் குறித்து விசாரணை  நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த 6 மாதங்களில் காஷ்மீருக்கு சுமார் 20 ஆயிரம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சென்றுள்ளது தெரியவந்தது. இவர்கள் பெரும்பாலும் மலேசியா மற்றும் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றுகண்டறியப்பட்டுள்ளது. அதேநேரம் இலங்கைச் சேர்ந்தவர்கள் சுமார் 25 பேர் காஷ்மீர் சென்று வந்திருப்பதாக பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். அவர்கள் குறித்த விசாரணை நடந்து வருகிறது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here