தொடர்ந்து ஆறாவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைநிலவரத்துக்கு ஏற்ப இந்திய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் விலையை நிர்ணயித்து வருகின்றன. இந்நிலையில், ஆறாவது நாளாக செவ்வாய்க்கிழமை (இன்றும்) பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் 76.59 ரூபாயாக இருந்த பெட்ரோல் விலை, தற்போது 76.72 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதேபோன்று 68.24 ரூபாயாக இருந்த டீசல் விலை தற்போது 68.38ஆக உயர்ந்துள்ளது.

இந்திய பங்குச் சந்தைகள் செவ்வாய்க்கிழமை (இன்று) காலை முதல், சிறிய ஏற்றத்துடன் காணப்படுகின்றன. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டெண் சென்செக்ஸ் 13.81 புள்ளிகள் உயர்ந்து 33,269.17 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 4.80 புள்ளிகள் உயர்ந்து 10,216.60 புள்ளிகளுடனும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. ஹிந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனப் பங்குகள் 3.02% உயர்ந்தும், இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் பங்குகள் 1.61% உயர்ந்தும், பாரத் பெட்ரோலிய நிறுவனப் பங்குகள் 1.23% உயர்ந்தும் காணப்படுகின்றன.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 65.09ஆக உள்ளது.

இதையும் படியுங்கள்: குஜராத் படுகொலை பிரதான நாயகனின் முகமூடியைக் கிழிக்க நெருப்பாற்றில் நீந்தும் ஒரு ஐ.பி.எஸ் அதிகாரியின் போராட்டம்…

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்