தொடரும் தற்கொலைகள்: பிளே ஸ்டோரிலிருந்து லோன் அப்ளிகேஷன்கள் நீக்கம்

Google instructed the apps which were not removed to comply with existing norms or face removal without any notice.

0
78

கொரோனா காலத்தில் நாடு முழுவதும் ஏரளமான மக்கள் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றனர்.

இதையடுத்து மக்களின் பணத் தேவையை சமாளிக்க மிக எளிதாக கடன் வழங்கும் இணையவழி நிதி நிறுவனங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.

செல்போனின் இந்த செயலிகளை பதிவிறக்கம் செய்துகொண்டால் போதும் ஒருவரின் KYCயை மட்டும் அடிப்படையாக கொண்டு மூவாயிரம், ஐந்தாயிரம் என உடனடி கடன்களை இந்த இணையவழி நிதி நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. 

இதனிடையே கடன் வழங்கும் நிதி நிறுவனங்களின் விதிமுறைகளை அறியாமால் கடன் பெற்று கடனுக்கு அதிக வட்டி , அபாராத வட்டி, கூட்டுவட்டி உள்ளிட்ட இன்னல்களுக்கு மக்கள் ஆளாவதாகவும் கடனைத் திரும்ப செலுத்த வழியுறுத்தி இந்த நிறுவனங்கள் மிரட்டல்களில் ஈடுபடுவதாகவும் மத்திய அரசுக்கு பூகார்கள் அதிகரித்த வண்ணம் இருந்தன.

அதையடுத்து பயனர்களின் பாதுகாப்பு கொள்கையை மீறிய தனிநபர் கடன் கொடுக்கும் ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன்களை பிளே ஸ்டோரிலிருந்து நீக்கியுள்ளதாக கூகுள் இந்தியா தெரிவித்துள்ளது. இதற்காக பயனர்கள் மற்றும் அரசு ஏஜென்சிகள் தேவையில்லாத அப்ளிகேஷன் என Flag செய்த நூற்றுக்கும் மேற்பட்ட அப்ளிகேஷன்களை கூகுள் பரிசீலனை செய்துள்ளது. 

ஹைதராபாத்தில் மொபைல் போன் அப்ளிகேஷன் மூலம் கடன் வாங்கியவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார் என போலீசார் வழக்கு பதிவு செய்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கையை கூகுள் மேற்கொண்டுள்ளது. 

இது தொடர்பாக கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் எங்கள் கூகிள் பிளே டெவலப்பர் கொள்கைகள் பயனர்களைப் பாதுகாப்பதற்கும் பாதுகாப்பாக வைப்பதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

மேலும் மக்களை ஏமாற்றும் மற்றும் சுரண்டலில் ஈடுபடும் தனிநபர் கடன் வழங்கும் நிதி நிறுவனங்களிடம் இருந்து பயனாளர்களை பாதுகாக்க உதவும் வகையில் எங்கள் நிதிச் சேவை கொள்கையை சமீபத்தில் விரிவுபடுத்தினோம்.

இதில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டதை தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here