தொடங்கியது அமோசன் தள்ளுபடி விற்பனை

0
596

குடியரசு தினத்தை முன்னிட்டு அமோசனின் கிரேட் இந்தியன் சேல் இன்று(ஞாயிற்றுக்கிழமை) முதல் ஜனவரி 22 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அமோசன் ப்ரைம் உறுப்பினர்களுக்கு நேற்று(சனிக்கிழமை) பிற்பகல் 12 மணி முதலே ஆரம்பமாகியுள்ளது.

ஆன்லைனில் விற்பனையில் முன்னணி நிறுவனமான அமோசன் தனது வாடிக்கையாளர்களுக்கு சலுகை விற்பனை அறிவித்துள்ளது. நேற்று இரவு 12 மணிக்கு தொடங்கிய இந்த ஆஃபர் தொடர்ந்து 4 நாட்கள் நடைபெறம்.

குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்பட்டுள்ள இந்த ஆஃபரில் ஸ்மார்ட்போன் மற்றும் தொழில்நுட்ப சாதனங்களுக்கு அதிகப்படியான சலுகைகள்வழங்கப்படுகின்றன.எஸ்.பி.ஐ வங்கி க்ரெடிட் கார்டு பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்குக் கூடுதலாக 10 சதவிகித தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோக வட்டியில்லா தவணை முறை மற்றும் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்களும் வழங்கப்பட உள்ளன.

ஸ்மார்ட்போன்களைப் பொறுத்தவரையில் பிரபலமாக உள்ள சமீபத்திய வரவுகளான ஒன்ப்ளஸ் 7, சாம்சங் கேலக்ஸி நோட், ரெட்மி 7 சீரிஸ், ஐபோன் XR ஆகிய போன்களுக்கு சிறப்புத் தள்ளுபடிகள் வழங்கப்பட்டுள்ளன.

எலெல்ட்ரானிக் பொருட்களைப் பொறுத்த வரையில் லேப்டாம், ஹெட்போன், கேமிரா ஆகியவற்றுக்கு அதிகத் தள்ளுபடி வழங்கப்படுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here