தேர்வு மற்றும் வேலை வாய்ப்புகளில் வெற்றி பெற இதை செய்யுங்கள்

0
225

இன்றைய காலத்தில் உயர்கல்வி, வேலைவாய்ப்பு என அனைத்திற்கும் பல தேர்வுகளை எழுத வேண்டியிருக்கிறது. இத்தகைய தேர்வுகளில் பெரும்பாலானவர்கள் பல முறை கலந்து கொண்டு சிறப்பாகவே தேர்வு எழுதினாலும் அதில் வெற்றி பெற முடிவதில்லை. இவர்களுக்கு கல்வி கடவுளான சரஸ்வதி தேவியின் அருள் கிடைக்குமானால் தேர்வுகளில் வெற்றி பெற்று அவர்கள் விரும்பிய கல்வி, வேலை ஆகியவற்றை பெறலாம். அதற்கான சரஸ்வதி பூஜை முறை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

சரஸ்வதி தேவி என்பது அறிவு, ஞானம் ஆகியவற்றின் தெய்வம். சரஸ்வதியை வழிபடுவர்களுக்கு அறிவாற்றல் பெருகுவதோடு, செல்வம் மற்றும் அனைத்தையும் பற்றிய ஞானமும் கிடைக்கிறது. மேலும் வாழ்வில் பொருளாதார முன்னேற்றமும், இன்ன பிற வளங்களும் அவர்கள் பெற சரஸ்வதி தேவி அருள்புரிவாள்.

சரஸ்வதி தேவியை வாரத்தின் அனைத்து நாட்களிலும் வணங்கலாம். சரஸ்வதி தேவிக்கான பூஜைகள் செய்ய விரும்புபவர்கள் அந்த தினத்தின் அதிகாலையில் எழுந்து குளித்து, முடித்து தூய்மையான ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும். அந்த ஆடைகள் வெள்ளை நிறத்தில் இருப்பது மிகவும் சிறப்பு.

ஒரு படிக ஜெப மாலையை சரஸ்வதி படத்திற்கு முன்பாக வைத்து, அந்த மாலைக்கு முன்பு நெய் தீபம் ஏற்றி, தூபங்கள் கொளுத்தி, குங்குமம் இட்டு வணங்கி பிறகு உங்கள் பூஜையறையில் ஒரு மஞ்சள் நிற துணியை கீழே விரித்து போட்டு, அதில் நீங்கள் சம்மணமிட்டு அமர்ந்து, உங்கள் வலது கையில் பூஜிக்கப்பட்ட அந்த படிக்க மாலையை எடுத்துக்கொண்டு அதை உருட்டியவாறே 

ஓம் ஹ்ரீம் வாக்வாதினி பக்வதே மம

கார்ய சித்தி கரி கரி பட் ஸ்வாஹா

என்கிற சரஸ்வதி மந்திரத்தை உங்களால் முடிந்த எண்ணிக்கை அளவு உரு ஜெபிக்க வேண்டும். குறைந்தது 1008 மந்திர உரு ஜெபிப்பது நல்லது. இப்படி பூஜை செய்து முடித்த பிறகே நீங்கள் உணவு அருந்த வேண்டும். இந்த பூஜையை 11 நாட்கள் முறைப்படி செய்ய வேண்டும். 11 ஆம் நாள் அந்த படிக ஜெப மாலை சரஸ்வதி தேவியின் பூரண அருள் பெற்ற விஜய மாலை ஆகிறது. அந்த மாலையை வேலைவாய்ப்பு நேர்முக தேர்வுகளுக்கு செல்லும் போதும், உயர்படிப்புகள் மற்றும் அரசாங்க வேலைவாய்ப்பிற்கான தேர்வுகள் எழுத செல்லும் போதும் உங்களுடன் எடுத்து செல்வதால் மேற்கண்ட விடயங்களில் உங்களுக்கு நிச்சய வெற்றி உண்டாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here