காஷ்மீர் சகோதரர்களைத் யாரவது தாக்கினால் நடவடிக்கை எடுங்கள் என்று மாநில அரசுகளுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வியாழனன்று உத்தரப் பிரதேச தலைநகர் லக்னௌவில் காஷ்மீரைச் சேர்ந்த வியாபாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

தாக்குதல் நடத்தப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆன பிறகே குற்றவாளிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

இந்த சம்பவத்துக்கு காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஓமர் அப்துல்லா, ராகுல் காந்தி , மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கண்டனம் தெரிவித்தனர்.

பின்னர்  தாக்குதல் நடத்திய 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர் என்று மாநில டிஜிபி ஆனந்த் குமார் மற்றும் கூடுதல் டிஜிபி ராஜீவ் கிருஷ்ணா செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

https://twitter.com/scribe_prashant/status/1103550832996425730 

இந்நிலையில் காஷ்மீர் சகோதரர்களைத் யாரவது தாக்கினால் நடவடிக்கை எடுங்கள் என்று மாநில அரசுகளுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் தனது டிவிட்டர் பக்கத்தில்

இந்த நாட்டில் ஒற்றுமையை காக்கவேண்டியது மிகவும் அவசியம்

லக்னௌவில் காஷ்மீர் சகோதரர்களை தாக்கியவர்கள் மீது உத்தர பிரதேச அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது; இது போன்று சம்பவம் நடந்தால் எல்லா மாநில அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளது

மாட்டின் பெயரால் பசுக்குண்டர்கள் அப்பாவி மக்கள்மீது கொடும் தாக்குதல் நடத்தி கும்பல் கொலைகளை உத்தரபிரதேசம், ராஜஸ்தானில் நடத்திய போது மௌனம் காத்த பிரதமர் மோடி நெடுநாளைக்கு பிறகு கண்டனம் தெரிவித்தார். நேற்று (வியாழக்கிழமை – 7-03-2019) காஷ்மீரிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து இருப்பதை பாராட்டியே ஆகவேண்டும். மக்களவைத் தேர்தல் வருகிறது அல்லவா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here