தேர்தல் முடிவு: ராஜினாமா செய்கிறார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு

0
132

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று (வியாழக்கிழமை) தனது பதவியை ராஜினாமா செய்கிறார். 

ஆந்திரத்தில் உள்ள 175 சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் 25 மக்களவைத் தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆளும் தெலுங்கு தேசம் கட்சிக்கும், ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டது. 

தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதில், ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மைக்கு அதிகமான இடங்களில் முன்னிலை பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. 

அந்த கட்சி தற்போது 149 தொகுதிகளில் முன்னிலை உள்ளது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here