தேர்தல் பறக்கும்படை என்று கூறி ரூ.1.07 கோடி கொள்ளையடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் தண்டலத்திலுள்ள கட்டுமான நிறுவனத்தின் மேலாளராக பணிபுரிபவர் உதயகுமார். இவர் வேப்பேரியில் தொழில் ரீதியாக கடனாக ரூ. 1.07 கோடி பெற்றுக் கொண்டு தனது காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது காருக்குள் மேலாளர் உதயகுமார், கணக்காளர் இளங்கோ மற்றும் ஓட்டுனர் இருந்துள்ளனர். 

சைதாப்பேட்டை பேருந்து நிலையம் அருகில் கார் செல்லும்போது திடீரென மற்றொரு கார் ஒன்று மறித்து நின்றது. அந்த காரில் இருந்து சிலர் வெளியே வந்து, தாங்கள் தேர்தல் பறக்கும் படையினர் என்றும் காரை சோதனை போட வேண்டும் என்றும் கூறி சோதனை செய்துள்ளனர். அப்போது காரில் பணம் இருந்தது தெரியவந்தது. 

இதனையடுத்து அந்த மர்ம கும்பல் உதயகுமாரின் காரிலேயே அவரை கடத்தி சென்றுள்ளனர். பின் பூந்தமல்லி அருகே உதயகுமாரை அடித்து உதைத்துவிட்டு ரூ.1.07 கோடியை கொள்ளையடித்து தப்பி ஓடியுள்ளனர். இச்சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த உதயகுமாரும் மற்றவர்களும் இது குறித்து உரிமையாளர்களிடம் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் நேற்று இரவு சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் உதயகுமார் புகார் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனைத்தொடர்ந்து அந்தப் புகாரில் உண்மை தன்மை உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பவம் நடந்த இடத்திலுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here