தேர்தல் நிதிபத்திரங்கள் பணமோசடி குற்றங்களை அதிகரிக்கும் ; அருண் ஜெட்லியை எச்சரித்த ஆர்பிஐ முன்னாள் கவர்னர்

0
222

 தேர்தல் நிதிப்பத்திரங்களால்  பணமோசடி குற்றங்களை அதிகரிக்கும்  என்று  2017 ஆம் ஆண்டு அருண் ஜெட்லியிடம் உர்ஜித் படேல் தெரிவித்துள்ளார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பணமதிப்பிழப்பை அமல்படுத்தினார் பிரதமர் மோடி. இதனால்   கருப்புப் பணம் ஒழியும் என்றார் மோடி .  

 2017  ஆம் ஆண்டு தேர்தல் நிதிப்பத்திரங்களை மோடி அரசு  அறிமுகம் செய்தது . 

பதிவு பெற்ற அரசியல் கட்சிகளும், நாடாளுமன்ற, சட்டமன்ற பொதுத்தேர்தல்களில் குறைந்தபட்சம் 1 சதவீதம் ஓட்டு வாங்கிய கட்சிகளும் இந்த தேர்தல் பத்திரங்களை பெறமுடியும்.

இந்தியாவை சேர்ந்த தனிநபரோ அல்லது நிறுவனங்களோ இந்த தேர்தல் பத்திரத்தை வாங்கி தாங்கள் விரும்பும் அரசியல் கட்சிக்கு நன்கொடையாக கொடுக்கலாம். அவர்கள் வங்கி கணக்கு மூலம் அந்த பத்திரத்தை பணமாக மாற்றிக்கொள்ளலாம். இந்த தேர்தல் பத்திரங்களை பாரத ஸ்டேட் வங்கி மட்டுமே வழங்கும்.  இந்த பத்திரங்களில் வாங்கியவர் பெயர் இருக்காது.  இதைக் கட்சிகளுக்கு வங்கிகள் மூலமாகவே நன்கொடையாக அளிக்கலாம்.

இந்த நன்கொடையை வழங்குபவர் யார் என அரசியல் கட்சிகளுக்குத் தெரியாது.   ஆயினும் இந்த தேர்தல் நிதிப்பத்திரங்கள் மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு வரி விலக்கு உண்டு.   தற்போது இந்த வருமானத்துக்கு வரி விலக்கு இருந்த போதிலும் தேர்தல் ஆணையத்துக்கு விவரங்கள் அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தகவல் ஆர்வலர் அஞ்சலி பரத்வாஜ் அளித்த கேள்விக்குக் கிடைத்த பதிலின்படி கடந்த 2017ஆம் வருடம் ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த உர்ஜித் படேல் இது குறித்து அப்போதைய நிதி அமைச்சர் அமித் ஷா அனுப்பியுள்ள கடிதம் குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளது.  அந்த கடிதத்தில் உர்ஜித் படேல், “ஒரு வங்கிக்கு கரன்சி நோட்டுக்கு இணையான  பத்திரங்கள் வழங்க அனுமதிப்பது சர்ச்சைக்குரியதாகும்.

ரிசர்வ் வங்கிக்கு மட்டுமே இவ்வாறு நோட்டுக்கள் மற்றும் நாணயங்கள் வெளியிடும் உரிமை உண்டு.  அந்த உரிமை  இந்த செயல் மூலம் பறிக்கப்படுகிறது.   எனவே ரிசர்வ் வங்கி அல்லாத மற எந்த வங்கியும் இது போல் பத்திரங்கள் வெளியிடுவதன் மூலம் பொருளாதார நிலை கடுமையாகப் பாதிக்கப்படும்.

அத்துடன் இதைப் பல ஷெல் நிறுவனங்கள் பயன்படுத்தி தங்கள் கருப்புப்பணத்தை மாற்ற முயலும்.  இதனால் பல பண மோசடிக் குற்றங்கள் நிகழ வாய்ப்புண்டு.  நாட்டில் நிலவும் கருப்பு பண புழக்கத்தைக் கட்டுப்படுத்த கொண்டு வரப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை இந்த தேர்தல் நிதி பத்திர திட்டம் மூலம் நீர்த்து போகும்  எனத் தெரிவித்துள்ளார்.

இந்த கடிதத்துக்கு முன்னாள் நிதி அமைச்சர் அருண்ஜெட்லி பதில் அளிக்கவில்லை எனவும் தெரிய வந்துள்ளது. நிதி அமைச்சரின் அப்போதைய செயலாளர் சுபாஷ் கார்க் பதில் அளித்துள்ளார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here