இந்திய தேர்தல் ஆணையம், மக்களவைத் தேர்தலையொட்டி நாடு முழுவதும் ரூ. 1,460 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.

தேர்தல் ஆணையம், மக்களவைத் தேர்தலையொட்டி அரசியல் கட்சியினர், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்க, பல்வேறு அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றது. அதனடிப்படையில், உரிய ஆவணங்களில் இன்றி, வாகனங்களில் எடுத்துச் செல்லப்பட்ட பணம், நகை உள்ளிட்டவற்றை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்தநிலையில், நாடு முழுவதும் நேற்று வரை ரூ. 1,460 கோடி மதிப்பிலான பணம், தங்கம், மதுபானங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ரூ. 208.55 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here