திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், அம்மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி, மேற்குவங்கத்தில் ஒருநாள் முன்னதாகவே தேர்தல் பரப்புரையை முடித்துக் கொள்ள வேண்டும் என்ற தேர்தல் ஆணையத்தின் உத்தரவு அரசியல் சாசனத்துக்கு எதிரானது என நேற்று(புதன்கிழமை) கடும் கண்டனத்தைத் தெரிவித்தார்.

கொல்கத்தாவில் பாஜக தலைவர் அமித் ஷா கலந்து கொண்ட பேரணியில் வன்முறை ஏற்பட்டது. இந்த வன்முறையின்போது  இருசக்கர வாகனத்திற்கு தீ வைப்பு உள்ளிட்ட சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். மேலும் விவேகனந்தா கல்லூரி வளாகத்தில் இருந்த, 19ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வியாளர் மற்றும் சமூக சீர்திருத்தவாதியான சந்திர வித்யாசகரின் சிலை உடைக்கப்பட்டது.  இதையடுத்து அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 

இதனால் மேற்கு வங்கத்தில் இன்று(வியாழக்கிழமை) இரவு 10 மணியோடு தேர்தல் பரப்புரையை முடித்துக்கொள்ள வேண்டும் என அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவுக்கு திரிணமுல் காங்கிரஸ் தலைவரும், அம்மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில்கொல்கத்தாவில் உள்ள தமது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவு அரசியல்சாசனத்துக்கு எதிரானது என்றும், இதற்கு முன் இப்படியொரு முடிவு எடுக்கப்பட்டதில்லை என்றும் கூறினார். தேர்தல் ஆணையம் பாஜகவுக்கு ஆதரவாகவும்,மற்றவர்களுக்கு ஒருதலைபட்சமாகவும் செயல்படுவதாக குற்றஞ்சாட்டிய மம்தா.

ஒருநாள் முன்னதாகவே தேர்தல் பரப்புரையை முடித்துக் கொள்ளும் அளவுக்கு, மேற்குவங்கத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போய்விடவில்லை என்று கூறினார். ‌

மேலும், வித்யாசாகர் சிலையை உடைத்ததற்கு பரிசளிக்‌‌கும் விதமாக பிரதமர் மோடிக்கும், அமித் ஷாவுக்கு, தேர்தல் ஆணையம் இப்படியொரு உத்தரவை பிறப்பித்துள்ளது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப் போவதாக மம்தா தெரிவித்தார். மேலும் அமித்ஷா நடத்திய பேர‌ணியில் தான் வன்முறை வெடித்தது, இதற்காக அவர் மீது தேர்தல் ஆணையம் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை” இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.  

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here