தேர்தல்களை நியாயமாக நடத்தினால், பாஜக வெறும் 40 இடங்களில்தான் வெற்றி பெறும் – மோடியிடம் கூறும் பாஜக தலைவர்

0
972

உச்சநீதிமன்ற வழக்கறிஞரும், பாஜக தலைவருமான  அஜய் அகர்வால் 2014 மக்களவைத் தேர்தலில் ரேபரேலியில் சோனியா காந்திக்கு எதிராக போட்டியிட்டார்.  அஜய் அகர்வால் மோடி பற்றி பிரதமர் மோடிக்கே ஒரு நீளமான கடிதத்தை எழுதியுள்ளார். 

பிரதமர் மோடி நன்றிக் கெட்டவர் என்று கூறும்  அஜய் அகர்வால் ‘ குஜராத் தேர்தலின்போது , டிசம்பர், 6, 2018 அன்று மணி சங்கர் ஐய்யரின் ஜங்புரா வீட்டில் முன்னாள் துணை ஜனாதிபதி ஹமித் அன்சாரி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோர் பாகிஸ்தான் அதிகாரிகளுடன் பேசினார்கள் என்று நான்தான் கூறினேன் . நான் அவ்வாறு கூறவில்லையென்றால் பாஜக குஜராத்  தேர்தலில் தோல்வியை சந்தித்திருக்கும் என்று கூறியுள்ளார்.    

நான் இவ்வாறு கூறியதை பிரதமர் மோடி நாட்டின் பாதுகாப்பு பற்றி கேள்வி எழுப்பி தேர்தல் பிரச்சாரங்களில் பேசினார், தோல்வியை சந்தித்திருக்க வேண்டிய தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. 

2014 மக்களவைத் தேர்தலில் அஜய் அகர்வால் ரேபரேலியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்தார். இம்முறை அவருக்கு மக்களவைத் தேர்தலில் போட்டியிட  வாய்ப்பு வழங்கப்படவில்லை. 

பல மூத்த பாஜக தலைவர்கள் என்னால்தான் குஜராத் தேர்தலில் பாஜக வென்றது என்பதை ஒப்பு கொண்டிருக்கிறார்கள். 

அஜய் அகர்வால் ஒரு ஆடியோவை வெளியிட்டிருக்கிறார். அந்த ஆடியோவில் அஜய் அகர்வால் மன்மோகன் சிங் பாகிஸ்தான் அதிகாரிகளுடன் பேசினார் என்று ஆர் எஸ் எஸ் தலைவர் தாத்ரேயா ஹோசபிலே -விடம் கூறுகிறார். 

தற்போது பிரதமர் மோடிக்கு எழுதியிருக்கும்  கடிதத்தில் அஜய் அகர்வால் கூறியிருப்பதாவது –   400 இடங்களைப் பிடிப்போம் என்று கூறிக் கொண்டிருக்கும் பாஜக, தேர்தல்களை நியாயமாக நடத்தினால், வெறும் 40 இடங்களில்தான் வெற்றி பெறும் . அந்த அதிர்ச்சியைத் தாங்கிக் கொள்ள தயாராக இருங்கள் 

 எனக்கு பிரதமர் மோடியை 28 வருடங்களாகத் தெரியும், அசோகா சாலையில் இருக்கும்  பாஜக அலுவலகத்தில் பலமுறை  இருவரும் உட்கார்ந்து சாப்பிட்டிருக்கிறோம் . இருந்தாலும் என்னை அவர் சரியாக நடத்தவில்லை. 

காந்தி குடும்பத்தின் கோட்டையான ரேபரேலியில் அவர்களை எதிர்த்து போட்டியிட்டு 1,73,721  வாக்குகளை வாங்கியது  நான்தான்.  2014  மக்களவைத் தேர்தலுக்கு முன் காந்தி குடும்பத்தை எதிர்த்து போட்டியிட்டவர்கள் மிக குறைந்த வாக்குகளையே பெற்றனர். 

ரேபரேலி மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் கிரிஷ் சந்திரா பாண்டே 2004 மக்களவைத் தேர்தலில் 31,209 ஓட்டுக்கள் பெற்றார். 2006 இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் வினய் கட்டியார் 19,657 ஓட்டுக்கள் பெற்றார். 2009 தேர்தலில் ஆர்பி சிங் வெறும் 25,444 ஓட்டுக்களே பெற்றார். 

இருந்தபிறகும் இந்தமுறை  கறைபடிந்த வேட்பாளருக்கு பாஜக ரேபரேலியில் போட்டியிட வாய்ப்பு அளித்திருக்கிறது. அந்த வேட்பாளருக்கு வெறும் 50,000 ஓட்டுகளே கிடைக்கும் என்றும் அந்தக் கடிதத்தில் எழுதியுள்ளார்.  

குஜராத் சட்டசபைத் தேர்தலில் வெற்றிபெற எல்கே அத்வானியின் அரசியல் வாழ்க்கை தியாகம் செய்யப்பட்டிருக்கிறது. 

இந்திய மக்கள் அனைவரும் எல் கே அத்வானி ஜனாதிபதியாக வேண்டும் என்று விரும்பினர். ஆனால் குஜராத் தேர்தலில் தோல்வி உறுதி என்பதைத் தெரிந்துக் கொண்ட பாஜகவினர் ராம் நாத் கோவிந்த் ஜி அவர்களை ஜனாதிபதியாக அறிவித்தனர். இதன்மூலம் காலம் காலமாக காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்து வந்த கோலி சமூகத்தினரை தன்பக்கம் இழுத்தனர் பாஜகவினர்.  

மீண்டும் குஜராத் சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தபோது 3 மூத்த பாஜக தலைவர்கள் என்னை சபித்தார்கள். குஜராத்தில் பாஜக வெற்றி பெற ஏன் நீங்கள் உதவி செய்தீர்கள்  என்று கேட்டனர். பாஜகவினர் அனைவரும் மோடியும் , அமித் ஷாவும் குஜராத் தேர்தலில் தோல்வியுற வேண்டும் என்றே விரும்பினர். அதன்முலம் அவர்கள் 2 பேரின் அகந்தை உடையும் என்று எதிர்பார்த்தார்கள். 

மேலும் நீங்கள் மோடிஜிக்கு மிகப் பெரிய உதவி செய்திருக்கிறீர்கள் ஆனால் மோடி அதை நினவில் வைத்துக் கொள்ளமாட்டார் என்றும் பாஜகவினர் கூறினர்.  

மேலும் அந்தக் கடிதத்தில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது கீழ்மட்டத்தில் நடக்கும் ஊழல்கள்பற்றி  நான் உங்களுக்கு பல முறை எழுதினேன் . அதை நீங்கள்  விசாரணைக்கு உட்படுத்தாமல் என்மீது உங்கள் கோபத்தை வெளிப்படுத்தினீர் .  

நீங்கள் என்னையும் , பாஜகத் தொண்டர்களை அடிமைப் போல் நடத்தி, 24 மணி நேரம் நாங்கள் உழைத்தும் எங்களுக்கு கிடைக்க வேண்டிய மதிப்பு கிடைக்கவில்லை. நீங்கள் ஊழலில் திளைத்திருந்தும் எங்களை மதிக்கவில்லை. 

மோடி நீங்கள்தான் நாட்டிலியே அறிவானவர், உங்களுக்கு யாருடைய உதவியும், அறிவுரையும்  தேவையில்லை. அதனால்தான் யாருடைய அறிவுரையையும் கேட்காமல் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை செயல்படுத்தினீர்கள். அதனால்தான்  ஏழை மக்களை வரிசையில் நிற்கவைத்து அவர்களை சாகடித்தீர்கள் .   

பணமதிப்பிழப்பின்போது 99 சதவீதம் பணம் வந்துவிட்டது. வங்கிகள் சில நபர்களுடன் இணைந்து போலி நோட்டுகளையும் டெபாசிட் செய்தது. அதுகுறித்து எந்த விசாரணையும் இதுவரை நடைபெறவில்லை என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.   

தி வயர் இதழ் அஜய் அகர்வாலிடம் பேசியபோது பாஜக தொண்டர்கள் பணமதிப்பழப்பின்போது சட்டவிரோதமாக நடந்தார்களா என்பது பற்றி தெரியவில்லை. ஆனால் பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்பதே ஒரு முட்டாள்தனமான நடவடிக்கை. பாஜகவிலிருந்து வெளியில் வருவீர்களா என்ற கேள்விக்கு பாஜக கட்சி யாருக்கும் சொந்தமானது இல்லை, நான் வெளியே வரமாட்டேன் என்றுக் கூறினார். 

  

https://thewire.in/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here