டாஸ்மாக் மது விற்பனை நேரத்தை குறைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக அரசு, உயர்நீதிமன்றத்தின் ஆலோசனைப்படி மது விற்பனையை 2 மணி நேரம் குறைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா டாஸ்மாக் கடைகள் படிப்படியாக மூடப்படும் என்று அறிவித்தார். இந்நிலையில், முதல்கட்ட நடவடிக்கையாக தமிழக அரசு சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள் ஆகியவற்றின் பணி நேரம் குறைக்கப்படும் எனவும் கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்படும் எனவும் ஆணை பிறப்பித்தது.

அதன்பேரில், முதற்கட்டமாக கடந்த 2016ம் ஆண்டு 500 மதுக்கடைகளும், 2017ம் ஆண்டு 500 கடைகளும் மூடப்பட்டன.

இந்நிலையில் மதுக்கடைகளை காலையில் திறப்பதற்கு பதில் மதியம் திறந்தால் என்ன? என்று அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருந்தது. தற்போது இதுகுறித்து தமிழக அரசு தரப்பில் பல்வேறு கட்ட ஆலோசனைகள் நடைபெற்றன. இதன் தொடர்ச்சியாக மதுக்கடைகளை பகல் 12 மணிக்கு பதில், மதியம் 2 மணிக்கு திறக்கலாம் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here