தேர்தலை முன்னிட்டு நமோ ஆப் தயாரித்த கம்பெனியின் பக்கங்களை தடை செய்த ஃபேஸ்புக் ; செய்தியை மறைத்த ஏஎன்ஐ

0
274

மக்களவைத் தேர்தல் தொடர்பான தங்களது பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, காங்கிரஸ் கட்சியோடு தொடர்புடைய 687 கணக்குகளை முடக்கி பேஸ்புக் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது என்று செய்தி வெளியிட்ட ஏஎன்ஐ செய்தி நிறுவனம் பாஜகவின் நமோஆப்தயாரித்த சில்வர் டச் நிறுவனத்திற்கு தொடர்பான 15 பக்கங்களை ஃபேஸ்புக் நீக்கியுள்ளது என்ற செய்தியை வெளியிடவில்லை

பின்பு ராய்ட்டர்ஸ் செய்திநிறுவனம் வெளியிட்ட நமோஆப் சம்பந்தப்பட்ட செய்தியை டிவீட் செய்தது ஏஎன்ஐ 

தேர்தல்  காலங்களில்  தவறான  செய்திகள்  சமூக  வலைத்தளங்களில்  பரவுவது  வழக்கம்.  தேர்தல் காலத்தில்  தவறானசெய்திகள்  பரவுவதை  தடுக்க  சமூக  வலைத்தளங்கள்  நடவடிக்கைகள்  எடுத்து  வருகின்றன.  டிவிட்டர்  தளம்  இந்தியாவில்இதற்கான  ஒரு  குழுவை  அமைத்துள்ளது.  அதேபோல  ஃபேஸ்புக்  நிறுவனம்  அரசியல்  விளம்பரங்கள்  அளிப்பதில்  கட்டுபாடுவிதித்துள்ளது.  அத்துடன்  போலி  கணக்குகளை  முடக்கும்  பணியில்  இறங்கியுள்ளது.

இந்நிலையில்   ‘நமோஆப்’  தயாரித்த  சில்வர் டச் நிறுவனத்தின்  பக்கங்களை  ஃபேஸ்புக்  நீக்கியுள்ளது.  இந்தப்  பக்கங்கள்உள்ளூர்  செய்திகள்,  அரசியல்  நிகழ்வுகள், இந்திய  அரசின்  செயல்பாடுகள்  மற்றும்  எதிர்கட்சிகளின்  நடத்தை  குறித்தும்பதிவிட்டு  வந்துள்ளன.  இப்பக்கங்கள்   நம்பகத்தன்மையில்லாத  முறையில்  செயல்பட்டதால்  இவற்றை  பேஸ்புக் நிறுவனம்முடக்கியுள்ளது.

 ஃபேஸ்புக்  நிறுவனம்  காங்கிரஸ்  கட்சியின்  தொழில்நுட்ப  பிரிவுக்கு  தொடர்பான  687  பக்கங்களை  நீக்கவுள்ளதாகதெரிவித்துள்ளது.  இந்தப்  பக்கங்களும்  நம்பகத்தன்மையில்லாத  முறையில்  செயல்பட்டதால்  ஃபேஸ்புக்  நிறுவனம்  இவற்றைஃபேஸ்புக்தளத்திலிருந்து  நீக்கவுள்ளதாக  கூறியிருந்தது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here