தேர்தலுக்குப் பிறகு நடந்த கலவரம் ;விசாரிக்கும் மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர் ஏ.பி.வி.பி அமைப்பில் களப்பணியாளராக பணிபுரிந்தவர் – மம்தா பானர்ஜி

The TMC supremo said that the election results were declared on May 2 and till May 4, she was only heading a caretaker government and took full command after swearing-in on May 5.

0
220

மேற்கு வங்கத்தில் தேர்தலுக்குப் பிறகு நடந்த கலவரம் குறித்தவை அனைத்தும் பாஜகவினரால் புனையப்பட்டது என்றும்  அதனை விசாரிக்கும் மனிதஉரிமைகள் ஆணையத்தின் குழு உறுப்பினர்கள், பாஜக சார்புடையவர்களாக உள்ளனர் என்றும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்குவங்க மாநில முதலமைச்சருமான மம்தா பானர்ஜி தெரிவித்க்துள்ளார். 

மேலும், அந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினர் ஒருவர் ஏ.பி.வி.பி அமைப்பில் களப்பணியாளராக பணிபுரிந்தவர் என்றும்  அவர் பாஜக சார்புடைய அறிக்கைக்குத் தனது பங்களிப்பை வழங்கக்கூடுமென மம்தா பானர்ஜி கூறியுள்ளார். 

சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற பிறகு வன்முறை நடந்தது உண்மை தான். ஆனால், அந்தச் சமயத்தில் தேர்தல் ஆணையமே மாநிலத்தின் சட்ட ஒழுங்கைக் கட்டுபடுத்தியது என்றும் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 

இதேபோன்று, “பாஜக வலுவாக உள்ள இடங்களில் திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.போலியான வீடியோ ஆதாரங்களை வைத்துக் கொண்டு கலவரம் நடந்தது போன்ற போலியான தோற்றத்தை பாஜக உருவாக்க முயல்கிறது. ஆனால் வங்காள மக்களால் ஏற்கனவே பாஜக நிராகரிக்கப்பட்டதால், அவர்கள் வெற்றி பெற மாட்டார்கள் என்றும் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here