தேர்தலுக்குப் பின்னர் மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் – மு.க.ஸ்டாலின்

0
235


தேர்தலுக்குப் பின்னர் மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

வடசென்னை தொகுதிக்குட்பட்ட கொளத்தூர் ஜி.கே.எம்.காலனியில் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது வெளியூர்களில் 20 நாட்கள் பிரச்சாரம் முடித்து இன்றுதான் சென்னை திரும்பியபோதும், கலைஞர் தன் உழைப்பைப் பாராட்டிய வார்த்தைகள் நினைவுக்கு வந்தததால் ஓய்வெடுக்க மனமில்லை என்றார்.

எனவே, தனது தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ள வந்ததாக ஸ்டாலின் குறிப்பிட்டார்.

பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக உதயசூரியனுக்கு ஓட்டு போட முடிவு செய்துவிட்டீர்களா? என தொண்டர்களைப் பார்த்து ஸ்டாலின் கேட்டபோது அவர்கள் ஒருமித்த குரலில் ஆமாம் என்றனர்.

தேர்தலுக்காக, ஓட்டுக்காக வந்து மக்களை சந்திப்பவன் தான் கிடையாது, என்றும், தன்னைப் போன்று அதிக நாட்கள் தொகுதிக்கு சென்று மக்களுக்காக அதிக நேரம் செலவழித்த எம்எல்ஏ வேறு யாரும் கிடையாது என ஸ்டாலின் தெரிவித்தார்.

இடைத்தேர்தல் முடிவுகள் வந்த பின் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும் எனக் கூறிய மு.க.ஸ்டாலின், கலைஞர் உயிருடன் இருந்திருந்தால் அவரே இங்கு வந்து வாக்கு கேட்டிருப்பார் என நினைவு கூர்ந்தார்.

காங்கிரஸ் ஆட்சியில்தான் நூறு நாள் வேலைத் திட்டம் கொண்டுவரப்பட்டது என்றும் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அது 150 நாட்களாக மாற்றப்படும் என்றும் திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி. ராஜேந்திரன் கூறினார்.

திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதிக்கு திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜெயக்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட அவர், இவ்வாறு கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here