தேர்தலுக்காகவே ராமர் கோவில் : சிவசேனா குற்றச்சாட்டு

Prime Minister Narendra Modi on Wednesday announced in the Lok Sabha formation of a 15-member autonomous trust to construct the temple at Ayodhya in Uttar Pradesh.

0
247

டெல்லியில் சட்டசபை தேர்தல் நாளை மறுதினம் நடைபெற உள்ள நிலையில் இன்று மாலையுடன் டெல்லி தேர்தல் பிரசாரம் முடிவடைகிறது. ஆட்சியை தக்கவைக்க ஆம் ஆத்மி, பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், டெல்லி சட்டசபை தேர்தலில் கடந்த முறையை விட பா.ஜ.க. சற்று கூடுதலான இடங்களைப் பெறுவதற்கு ஸ்ரீ ராமர் உதவட்டும் என சிவசேனா கட்சியின் சாம்னா பத்திரிகை கடுமையாக தாக்கியுள்ளது.

இதுதொடர்பாக, சிவசேனா கட்சியின் பத்திரிகையான சாம்னாவில்,  தலைநகர் டெல்லியில் 70 இடங்களுக்கான சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு 4 நாள் மீதமுள்ள நிலையில், மக்களவையில் பிரதமர் மோடி அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான அறக்கட்டளையை அறிவித்துள்ளார்.

தேர்தலை கருத்தில் கொண்டே பிரதமர் மோடி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதன்மூலம் தேர்தலில் கடந்த முறையை விட கூடுதல் இடங்களை அக்கட்சி பெறுவதற்கு ஸ்ரீராமர் உதவட்டும்.

ராமர் கோவில் விவகாரத்தை நாங்கள் அரசியலாக்க விரும்பவில்லை என பாஜகவினர் கூறி வருகின்றனர். ஆனாலும், தேர்தலுக்காகவே ராமர் கோவில் பற்றிய அறிவிப்பை பா.ஜ.க. வெளியிட்டுள்ளது என கடுமையாகச் சாடியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here