தேர்தலில் மோடிக்கு உதவத்தான் புல்வாமாவில் தாக்குதலை நடத்தியதா பாகிஸ்தான்? அர்விந்த் கெஜ்ரிவால்

0
178
Arvind Kejriwal

பிரதமர் மோடிக்கு மக்களவைத் தேர்தலில் உதவுவதற்காகவே புல்வாமா தாக்குதலை பாகிஸ்தான் நடத்தியதா என்று டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், இந்தியாவில் அடுத்து காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், காஷ்மீர் பிரச்சினையை பேசித் தீர்க்க முடியாது ஏனெனில் எதிர்க்கட்சியாக அமரும் பாஜக அதற்கு அனுமதிக்காது . ஆனால் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், காஷ்மீர் பிரச்சினையை பேசித் தீர்க்க முயலும், அதனால் மோடி ஆட்சி மூண்டும் வரவேண்டும்  என்றுக் கூறியிருந்தார். 

பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு இம்ரான் கான் ஆதரவு தெரிவித்து இருப்பதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்தன. 

பிடிபி கட்சியின் தலைவர் மெஃஹ்பூபா முப்தி, தேசியமாநாட்டுக் கட்சியின் தலைவர் ஓமர் அப்துல்லா, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவரும், கர்நாடக முதல்வருமான ஹெச்.டி. குமாரசாமி ஆகியோரும் மோடிக்கு இம்ரான் கான் ஆதரவு குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்நிலையில், டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் தனது டிவிட்டர் பக்கத்தில் பாகிஸ்தானும், இம்ரான் கானும் வெளிப்படையாக மோடிக்கு ஆதரவு அளிக்கிறார்கள். பாகிஸ்தானுடனும், இம்ரான் கானுடனும் ரகசியமாக உறவு வைத்துள்ளார் மோடி என்பது தெளிவாகத் தெரிந்துவிட்டது.

மக்களவைத் தேர்தலில்  பிரதமர் மோடிக்கு உதவுவதற்காகவே பிப்ரவரி 14-ஆம் தேதி, புல்வாமாவில்  40 சிஆர்பிஎப் வீரர்களை பாகிஸ்தான் கொன்றதா எனும் கேள்வி எழுகிறது. மேலும் நமோ தொலைக்காட்சிக்கு இதுவரை எந்தவிதமான உரிமையாளரும் அதிகாரபூர்வமாக இல்லை என்பதால், அந்த தொலைக்காட்சிக்கு பாகிஸ்தான் நிதியுதவி வழங்குகிறதா? என்று பதிவிட்டுள்ளார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here