வரும் 2019ஆம் ஆண்டில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளநிலையில், அடுத்த மூன்றாண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என பாரதிய ஜனதா கட்சியின் மூத்தத் தலைவரும், மத்திய அமைச்சருமான உமா பாரதி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர், ”அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு நான் தேர்தலில் போட்டியிட மாட்டேன். பாஜகவுக்குத் தேர்தல் பிரச்சாரம் செய்வேன். ஆனால் நான் தேர்தலில் போட்டியிட்டால், என் உடல்நிலை பாதிக்கப்படும். என் முழங்காலில் பிரச்சினை உள்ளது” என்றார். மேலும் அவரது முடிவை பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா ஏற்றுக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: ஒக்கி புயல் பேரிடரின் முதல் ஆவணம்

கடந்தாண்டு செப்டம்பர் மாதத்தின்போது, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டது. இதில், உமா பாரதியிடமிருந்த நதிகள் மேம்படுத்துதல் மற்றும் கங்கையைத் தூய்மைப்படுத்துதல் துறையை மத்திய அமைச்சர் நிதின்கட்கரியிடம் ஒப்படைக்கப்பட்டது. உமாபாரதிக்கு குடிநீர் மற்றும் பொதுசுகாதாரத்துறை வழங்கப்பட்டது. மேலும், புதிய அமைச்சரவை பதவியேற்பு விழாவிலும் உமாபாரதி கலந்துகொள்ளவில்லை.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்