தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத மேயர்; லாரியில் கட்டி இழுத்துச் சென்ற மக்கள் (viral video)

0
300

மத்திய அமெரிக்க நாடான மெக்ஸிகோவில் உள்ள சியாபாஸ் மாகாணத்தில் இருக்கும் லாஸ் மார்கரிட்டாஸ்  நகரத்தின் மேயராக இருப்பவர் ஜார்ஜ் லூயிஸ் எஸ்காண்டோன்.

தேர்தலில் அளித்த வாக்குறுதியின்படி, அவர் மின்சாரம், குடிநீர், சாலை என்று எந்த வசதியும் செய்யவில்லை என்று எஸ்காண்டானை பொதுமக்கள் தாக்கி லாரியில் கட்டி இழுத்துச் சென்ற சம்பவம் நடந்துள்ளது.

 மேயரின் அலுவலகத்துக்குள் நுழைந்த கும்பல், அவரை வெளியே இழுந்து வந்து தாக்கியுள்ளது. பின்னர், மேயரின் கைகளை ஒரு டிரக்கில் கட்டி அவரை சாலையில் இழுத்துச் சென்றுள்ளனர்.

அதற்குப் பின்னால் கம்பு மற்றும் குச்சிகளுடன் பல கிராம மக்கள் ஓடுகின்றனர். இந்தச் சம்பத்தின் வீடியோ வைரலாக பரவி வருகின்றது.
 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here