நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்த தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில், பாமகவுக்கு 7 நாடாளுமன்ற தொகுதிகளும், பாஜகவுக்கு 5 தொகுதிகளும், தேமுதிகவுக்கு 4 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. இதேபோல், புதிய தமிழகம் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதிக் கட்சி, என்.ஆர் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
அந்த வகையில், அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்து போட்டியிடும் தேமுதிகவுக்கு, வட சென்னை, கள்ளக்குறிச்சி, திருச்சி, விருதுநகர் ஆகிய 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாக நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தேமுதிக வேட்பாளர் பட்டியலை இன்று கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் வெளியிட்டார்.

1. கள்ளக்குறிச்சி – எல்.கே.சுதீஷ்

2. வடசென்னை – மோகன்ராஜ்

3. திருச்சி – டாக்டர் இளங்கோவன்,

4. விருதுநகர் – அழகர்சாமி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here