பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் கூட்டணி தலைவர்களின் புகைப்படங்கள் அடங்கிய விளம்பரம் அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான ‘நமது அம்மா’வில் வெளியாகி உள்ளது. ஆனால் அந்த விளம்பரத்தில் விஜயகாந்த் புகைப்படம் ”மிஸ்சிங்”.

தங்கள் கூட்டணியில் தேமுதிக இணையும் என பாஜக மற்றும் அதிமுகவை சேர்ந்த தலைவர்கள் நம்பிக்க்கையுடன் கூறி வருகின்றனர்.

அதிமுக – பாஜக கூட்டணியில் தேமுதிகவை கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வந்தது. ஆனால் தேமுதிக தனது நிலைப்பாட்டை இன்னும் அறிவிக்கவில்லை.
இந்த சூழலில் இன்று பிரதமர் மோடி சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில் அதிமுக – பாஜக கூட்டணி தலைவர்கள் பங்கேற்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பரப்புரையை தொடங்குகிறார்.

இந்நிலையில், அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் இந்த பொதுக்கூட்டத்துக்காக வெளியிடப்பட்டுள்ள விளம்பரங்களில், பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களின் படங்களும் இடம்பெற்றுள்ளன. ஆனால் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் படம் இடம்பெறவில்லை. இதனால் அதிமுக- தேமுதிக கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று (புதன்கிழமை) வெளியாகுமா என்பதில் சந்தேகம் நிலவுகிறது.

மேலும் நாடாளுமன்றத் தேர்தலில்,தேமுதிக தனித்து போட்டியிடக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

#BJP, #ADMK, #PMK, #TNAssembly, #2019Elections, #DMK, #DMDK, #Vijaykanth, #tamilnadu

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here