தேனியில் நியூட்ரினோ திட்டத்தைச் செயல்படுத்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக ஆய்வுக்குழு பரிந்துரைத்துள்ளது. இதற்கு அதிமுக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் அனுமதி வழங்கியது. இந்த அனுமதிக்கு எதிர்ப்பு தெரிவித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் மூலம் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், தற்காலிகமாக இத்திட்டத்தை நிறுத்திவைக்க உத்தரவிட்டது. இதனிடையே நியூட்ரினோ திட்டத்தைக் கைவிடும் எண்ணம் ஏதுமில்லை என மத்திய அரசு மக்களவையில் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், நியூட்ரினோ திட்டத்தைச் செயல்படுத்த சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக் குழு பரிந்துரைத்துள்ளது.இத்திட்டத்தால் கதிர்வீச்சு அபாயம் இருக்காது என்றும், பொதுமக்களி கருத்துகளைக் கேட்க வேண்டியதில்லை எனவும் சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக் குழு தெரிவித்துள்ளது.

thambi

இது குறித்து பேசிய அதிமுக நாடாளுமன்ற உறுப்பினரும், மக்களவைத் துணை சபாநாயகருமான தம்பிதுரை, நியூட்ரினோ திட்டத்தை தமிழக அரசு எதிர்க்கும் என்றார்.

இதையும் படியுங்கள்: 35 கோடி குழந்தைகள் போர் நடைபெறும் பகுதிகளில் தவிப்பு – Save the Children

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்