தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி வனப்பகுதியில் கல்லூரி மாணவர்கள் 40 பேர் காட்டுத்தீயில் சிக்கினர். அவர்களை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்ட உத்தரவிடப்பட்டுள்ளன. மேலும் மீட்கப்பட்ட மாணவிகளுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

போடி அருகே குரங்கணி வனப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (நேற்று) கல்லூரி மாணவர்கள் 40க்கும் மேற்பட்டோர் மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இத்தீயில் பயிற்சிக்கு சென்ற மாணவர்கள் சிக்கிக் கொண்டனர்.

இது குறித்து தகவலறிந்து அப்பகுதிக்கு விரைந்த, போலீசார் மற்றும் வனக்காவலர்கள், அப்பகுதி மக்களுடன் இணைந்து காட்டுத்தீயில் சிக்கிய மாணவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இப்பணியில் 100க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் வனப்பகுதியில் சிக்கிய மாணவர்களை மீட்க விமானப்படைக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உத்தரவிட்டுள்ளார். மேலும் இரவு நேரத்தில் மீட்புப் பணிகளுக்கு சாத்தியமில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: சிரியா: பட்டினியால் உண்டான போர் இது

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்