நியூட்ரினோ திட்டத்தினை தமிழகத்திலிருந்து வேறு மாநிலத்துக்கு மாற்றும் திட்டம் இல்லை என மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இத்திட்டத்தால் வனம் மற்றும் நிலம் பாதிக்கப்படும் என அப்பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மக்களவையில் இது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார்.

jithendra

அதில், தேனியில் உள்ள நியூட்ரினோ திட்டத்தைக் கைவிடும் எண்ணம் இல்லை என்றும், தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி கிடைக்காததால் கால தாமதம் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

நியூட்ரினோ எடுப்பதால் ஏற்படும் மாசுபாடு குறித்து ஆய்வு செய்வதற்காக ஏழு பேர் கொண்ட குழு ஒன்றைத் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அமைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், இந்தத் திட்டத்துக்கு கேரள அரசு எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள் : விஜய் அரசியலுக்கு வரமாட்டார் – எஸ்.ஏ.சந்திரசேகரன் சத்தியம்

இதையும் படியுங்கள் : தலைவரை ஏம்பா விமர்சிக்கிறீங்க…? – தொண்டன் லாரன்சின் வலியும், சில விளக்கங்களும்

இதையும் படியுங்கள் : அதிசயம்… ஒரு மாதத்துக்கு முன்பே விற்றுத்தீர்ந்த பாகுபலி 2 டிக்கெட்கள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்