சீனாவுடனான எல்லை விவகாரத்தில் வெளியுறவுத்துறை அமைச்சகமும் முப்படை தலைமை தளபதியும் வேறு வேறு நிலைபாடுகளை எடுத்ததாக வெளியான செய்தியை ராகுல் காந்தி மேற்கோள்காட்டியுள்ளார்.
மன்னிக்க முடியாத அளவுக்கு தேசிய பாதுகாப்பு சமரசம் செய்யப்பட்டுள்ளது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமரிசித்துள்ளார். சீனாவுடனான எல்லை விவகாரத்தில் வெளியுறவுத்துறை அமைச்சகமும் முப்படை தலைமை தளபதியும் வேறு வேறு நிலைபாடுகளை எடுத்ததாக வெளியான செய்தியை ராகுல் காந்தி மேற்கோள்காட்டியுள்ளார்.
குறிப்பாக சீன விவகாரத்தில், அரசுக்கு எந்த விதமான வியூகமும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். திபெத் தன்னாட்சி பகுதிக்கும் இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்திற்கும் நடுவே அமைந்துள்ள சர்ச்சைக்குரிய பகுதியில் சீனா பெரிய கிராமத்தை எழுப்பியுள்ளதாக அமெரிக்க ராணுவம் சமீபத்தில் தெரிவித்திருந்தது.
இதற்கு பதிலளித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், எங்கள் பகுதியில் சீனா மேற்கொண்ட சட்டவிரோதமான ஆக்கிரமிப்பையும் நியாயமற்ற அவர்களின் கூற்றுகளையும் ஏற்கவில்லை என குறிப்பட்டிருந்தது. இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியை கடுமையாக விமரிசித்துள்ள ராகுல் காந்தி நமது தேசிய பாதுகாப்பு மன்னிக்க முடியாத அளவுக்கு சமரசம் செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் இந்தியாவிடம் சரியான வியூகம் இல்லை. மிஸ்டர் 56 இன்ச் அச்சப்படுகிறார்.