அஸ்ஸாம் தேசிய குடியுரிமை இறுதி வரைவுப்பட்டியல் பதிவேட்டில் அரசு மெத்தனமாக செயல்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

தேசிய குடியுரிமை இறுதி வரைவுப்பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. அஸ்ஸாம் மாநிலத்தில் 3.29 கோடி பேர் வசித்து வரும் நிலையில், 2.89 கோடி மக்களின் பெயர் மட்டுமே இடம் பெற்றுள்ளது. மொத்தம் 40 லட்சம் பேரின் பெயரகள் இந்த பட்டியலில் விடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது. குடியுரிமை கொடுக்கப்படாத 40 லட்சம் பேர், விரைவில் சேர்க்கப்படுவர் என்று அரசு தரப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ராகுல் காந்தி கூறும் போது “1985-இல் அஸ்ஸாம் மாநிலத்துக்காக போடப்பட்ட ஒப்பந்தத்தின் மூலம் அளிக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவு செய்வதற்காக மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இந்த தேசிய குடியுரிமை பதிவேடு கொண்டுவரப்பட்டது .

Screen Shot 2018-07-31 at 1.02.51 AM

ஆனால், மத்தியில் இருக்கும் பாஜக மற்றும் அஸ்ஸாம் மாநிலமும் இதனை செயல்படுத்திய விதம் 1200 கோடி ரூபாய் வரை செலவிட்ட போதிலும் மிகவும் மெத்தமான உள்ளது. அஸ்ஸாமில் வசிக்கும் பல்வேறு இந்தியர்களின் பெயர்கள் இந்த பதிவேட்டில் இடம்பெறாதது மாநிலத்தில் பாதுகாப்பற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த பிரச்சனையை சரிசெய்ய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அஸ்ஸாமில் அமைதி நிலவவும், இந்த வரைவு பதிவேடு மூலம் அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கும் சாதி, மத, இன பாகுபாடு பார்க்காமல் காங்கிரஸ் தொண்டர்கள் உதவிட வேண்டும்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here