ஆம் ஆத்மி கட்சி விரைவில் தேசியக் கட்சியாக உருவெடுக்கலாம்.

டெல்லியில் ஆளும் கட்சியாக உள்ள ஆம் ஆத்மி கட்சி, கோவா மற்றும் பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் முதல் முறையாக போட்டியிட்டது. இத்தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் 20 தொகுதிகளில் வெற்றிப்பெற்றிருந்தது. அதாவது 23.7% வாக்குகள் பெற்றிருந்தது.

அதேபோன்று கோவா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தத் தொகுதியிலும் வெற்றி பெறாவிட்டாலும், 6.3% வாக்குகளை ஆம் ஆத்மி கட்சிப் பெற்றிருந்தது. கடந்த டெல்லி சட்டமன்றத் தேர்தலில்ன்போது, மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 67 தொகுதிகளில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றிருந்தது. மொத்தம் 54.34% வாக்குகள் ஆம் ஆத்மிக்குக் கிடைத்தன.

மேலும் 2014இல் நடந்த மக்களவைத் தேர்தலில் மொத்தம் 400க்கும் மேற்பட்ட தொகுதிகளில் ஆம் ஆத்மி போட்டியிட்டது. இதில் பஞ்சாப் மாநிலத்தில் நான்கு தொகுதிகள் ஆம் ஆத்மிக்குக் கிடைத்தன. இதன் மூலம் ஆம் ஆத்மி கட்சி தேசிய கட்சியாக உருவெடுக்கத் தேவையான தகுதிகளைப் பெற்றுக்கொண்டு வருகிறது.

தேசியக் கட்சியாக உருவெடுக்க என்ன தகுதிகள் தேவைப்படுகின்றன?

* மக்களவைத் தேர்தலில் ஒரு மாநிலக் கட்சி குறைந்தது இரண்டு சதவிகித வாக்குகளை அதாவது ஏதேனும் மூன்று மாநிலங்களிலிருந்து பெற்றிருக்க வேண்டும்.

* நான்கு மாநிலங்களில் ஆறு சதவிகித வாக்குகள் மற்றும் கூடுதலாக நான்கு மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்

* நான்கு மாநிலங்களில் மாநிலக் கட்சிக்கான அந்தஸ்தைப் பெற்றிருக்க வேண்டும்.

தேசிய கட்சியாக உருவெடுத்தால் என்ன பலன்கள் கிடைக்கின்றன?

* இந்தியாவில் எந்த இடத்தில் போட்டியிட்டாலும், அந்தக் கட்சிக்கான நிரந்தரமான சின்னத்தில் போட்டியிடலாம்

* பொதுத் தேர்தலின்போது, மாநில அரசின் வானொலி மற்றும் தொலைக்காட்சியில் கட்டணம் ஏதுமின்றி, குறிப்பிட்ட நேரத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்

எத்தனை தேசியக் கட்சிகள் இந்தியாவில் உள்ளன?

மொத்தம் ஏழு கட்சிகள் தேசியக் கட்சிகளுக்கான அந்தஸ்தைப் பெற்றுள்ளன. பாரதிய ஜனதா கட்சி; காங்கிரஸ்; பகுஜன் சமாஜ் கட்சி; இந்திய கம்யூனிஸ்ட் கட்சி; மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி; தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் திரினாமுல் காங்கிரஸ் கட்சி

இதையும் படியுங்கள் : எல்லா தண்ணியும் கடல்ல விட்டீங்க , இப்ப தண்ணிக்கு கஷ்டப்படுறோம்

இதையும் படியுங்கள் : “எண்ணெயவிட தண்ணிய சிக்கனமா செலவழிக்கறேன் “

இதையும் படியுங்கள் : “மெட்ரோ வாட்டர் தண்ணீர் ஏழை ஜனங்களுக்கு இல்லையா?”

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்